இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் அதிர்ஷ்டம், ஜனவரி 13 செவ்வாய் பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி, 2023 ஆம் ஆண்டு தொடங்கியவுடன், தைரியம், வலிமை, நிலம்-செல்வம் தரும் கிரகமான செவ்வாய் பெயர்ச்சி நடகப்போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 13, 2023, 07:24 PM IST
  • செவ்வாய் பெயர்ச்சியை எதிர்கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள்.
  • செவ்வாய் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு கவலை அதிகரிக்கும்
  • பணியிடத்தில் சிக்கல் அதிகரிக்கும்
இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் அதிர்ஷ்டம், ஜனவரி 13 செவ்வாய் பெயர்ச்சி title=

வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றும். தைரியம்-பலம், நிலம்-சொத்து, திருமணம் ஆகிய காரணிகளான செவ்வாயும் விரைவில் தன் போக்கை மாற்றப் போகிறது. தற்போது செவ்வாய் கிரகம் பிற்போக்கு நிலையில் உள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முன்னோக்கி வரவுள்ளது. மேலும் வரும் வருடம் செவ்வாய் ரிஷப ராசியில் பெயர்ச்சியாகுவார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். எனவே 2023-ம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் மார்கி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தருவார் 

கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் வேலை-வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். மரியாதை கிடைக்கும். வணிக உறவுகள் வலுவாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க | டிசம்பரில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள், கேட்டது கிடைக்கும் 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நேரடி சஞ்சாரம் பல நன்மைகளை தரும். வேலையில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தற்போதைய வேலையில் பதவி உயர்வு பெறலாம். வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: செவ்வாயின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகஸ்தர்கள் மரியாதை அல்லது விருதுகள் பெறலாம். உங்கள் பணி பாராட்டப்படும். தடைப்பட்ட நிலம் மற்றும் சொத்து தொடர்பான பணிகள் தற்போது முடிவடையும். சொத்து சம்பந்தமான நல்ல ஒப்பந்தமும் கூடும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்: ஜனவரி 13 நடக்கவிருக்கும் செவ்வாய் பெயர்ச்சி மீன ராசியினருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வை அளிக்கும். தங்களுக்கு விருப்பமான இடத்துக்கு மாறுதல் வேண்டுவோர் விருப்பமும் நிறைவேறும். வியாபாரத்திற்கும் இந்த நேரம் சாதகமாக அமையும். திருமண வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News