கனவில் மீன் வந்தால் இவ்வளவு சிக்கல்களா? அசுப அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

கனவில் மீன் பார்ப்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான முடிவை கொண்டுள்ளது. கனவில் மீன்களைப் பார்ப்பது நிஜ உலகில் நாம் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையது.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2024, 03:55 PM IST
  • மீன் கனவில் வந்தால் சிலருக்கு நல்லது இல்லை.
  • இறந்த மீன்களை பார்ப்பது அபசகுனம் ஆகும்.
  • சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கனவில் மீன் வந்தால் இவ்வளவு சிக்கல்களா? அசுப அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்! title=

நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கனவு வருகிறது.  சிலருக்கு பகலில் தூங்கும் போதும் கனவு வருவதுண்டு.  அறிவியலின் படி கனவுகளில் காணும் அனைத்திற்கும் சில அர்த்தம் இருப்பதாக கூறப்படுகிறது.  சில கனவுகள் நமது கடந்த காலத்தை பிரதிபலிக்கின்றன, சிலவரு எதிர்காலத்தை பிரதிபலிக்கின்றன. அதேபோல, கனவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கு சில எதிர்வினை உள்ளது.  கனவில் சில உயிரினங்களைக் பார்த்தால் அதற்கும் சில நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு நபர் தனது கனவில் ஒரு மீனை பார்த்தால் அந்த நபரின் வாழ்க்கையில் சில விளைவுகளை ஏற்படுத்தும். கனவில் மீனைப் பார்த்தால் நமது வாழ்வில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க | மே 1 முதல் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

கர்ப்ப காலத்தில் மீன் கனவு

கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் கனவில் மீன் வந்தால் நல்லது என்று கூறப்படுகிறது. குறிப்பாக கனவில் நீங்கள் நிறைய மீன்களைப் கண்டால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். இந்த கனவு உங்கள் கர்ப்ப காலம் நன்றாக உள்ளது என்பதை குறிக்கிறது. மேலும் உங்களுக்கு எந்த வித பிரச்சனையும் வராது என்பதை குறிக்கிறது.  இந்த கனவு உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், மேலும் இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

வளையில் சிக்கியுள்ள மீன்

உங்கள் கனவில் நீங்கள் வளையில் சிக்கியுள்ள மீனைக் கண்டால் அது உங்கள் பொறுப்பின் அடையாளமாக இருக்கலாம். இந்த கனவு நிஜ வாழ்க்கையில் வரவிருக்கும் எதிர்காலத்தில் சில பெரிய பொறுப்பைப் பெறலாம். மேலும் நீங்கள் தங்க மீனைக் கனவில் கண்டால், நீங்கள் சில பொறுப்புகளை சரியாகச் செய்யவில்லை என்பதைக் குறிக்கிறது. அதே போல இறந்த மீனை கனவில் பார்த்தல் நல்லது இல்லை. இது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.  

கனவில் ஒரு ஜோடி மீன் பார்த்தால்

உங்கள் கனவில் ஒரு ஜோடி மீனை நீங்கள் பார்த்தல் அது உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு நல்ல அறிகுறியாக இருக்கும். ஒரு ஜோடி மீனைப் பார்ப்பது என்பது உங்கள் காதலன் அல்லது மனைவியுடன் உங்கள் காதல் அதிகரிக்கும் என்றும் அர்த்தம். உங்கள் கனவில் தங்கமீனைப் பார்ப்பது உங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும் என்று அர்த்தம்.  மேலும் வண்ணமயமான மீன்களைக் கனவில் பார்ப்பது ஒவ்வொரு மீனின் நிறத்தை பொறுத்து மாறும். வண்ண மீன்கள் பொதுவாக கனவு காண்பவரின் ஆளுமை மற்றும் மனோபாவத்தை பிரதிபலிக்கின்றன. 

மீன் பிடிப்பதை பார்த்தால்

கனவில் நீங்கள் கடலில் நிறைய மீன்களைப் பிடிப்பதை போல் பார்த்தால், இந்த கனவு நிஜ வாழ்க்கையில் நீங்கள் எதையாவது செய்வதில் தோல்வியடைகிறீர்கள் என்பதை பற்றி குறிக்கிறது, ஆனால் விரைவில் நீங்கள் அந்த வேலையில் வெற்றி பெறுவீர்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய மீன்களைப் பிடித்தீர்கள் என்றால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள், உங்கள் பணத்தைப் பெறுவீர்கள். உங்களால் பிடிக்க முடியவில்லையா என்றால் நிதி மற்றும் ஆரோக்கியம் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்னும் 4 நாட்களின் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை ஆரம்பம்: பெயர்ச்சியாகிறார் சுக்கிரன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News