நவம்பர் மாதத்தில் யோகத்தை அளிக்கும் சூரியன் புதன் சுக்கிரன் பெயர்ச்சி! 4 ராசிக்கு சூப்பர்

Planet Transit: துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகவிருக்கும் முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2022, 06:06 AM IST
நவம்பர் மாதத்தில் யோகத்தை அளிக்கும் சூரியன் புதன் சுக்கிரன் பெயர்ச்சி! 4 ராசிக்கு சூப்பர் title=

புதுடெல்லி: இன்னும்சில நாட்களில் மூன்று வலுவான கிரகங்களின் ராசி மாற்றம் நிகழவிருக்கிறது. துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகவிருக்கிறார் சுக்கிரன். செல்வம், செழிப்பு, அழகு, அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் இடம் மாறுவது, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல, விருச்சிக ராசியில் புதன் பெயர்வதும், விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரமும் பலருக்கும் பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி

தகவல் தொடர்பு, பேச்சு, அனிச்சை செயல்கள் போன்றவற்றிற்கு நன்மை செய்பவர் புதன். விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ள புதன் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2022 நவம்பர் 13ம் நாளன்று விருச்சிக ராசிக்குள் நுழையும் புதன் மங்கல காரகர் ஆவார். இரவு  09:06 மணிக்கு புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது.

விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம்

அதேபோல, விருச்சிக ராசியில் சூரியனின் பெயர்ச்சி நவம்பர் 16, 2022, புதன்கிழமை மாலை 6.58 மணிக்கு, துலாம் ராசியில் இருந்து நிகழவிருக்கிறது. சூரியனுடன் நட்பாக இருக்கும் செவ்வாய் கிரகத்தின் வீடான விருச்சிகத்தில் வெப்ப கிரகத்தின் பெயர்ச்சியானது, சிலருக்கு ஏற்றத்தையும் பலருக்கு மாற்றத்தையும் கொடுக்கும். 

மேலும் படிக்க | நவம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகள் மீது மாதம் முழுதும் பண மழை, லாபம் பெருகும்

விருச்சிக ராசியில் சூரியன் & புதன் சஞ்சாரம் புதாதித்ய யோகத்தை உருவாக்கும்
சூரியனும், புதனும் ஒரு ராசியில் சேர்ந்தால், இந்த இணைவு புத்தாதித்ய யோகத்தை (புதன் +ஆதித்யன்) உண்டாக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாதித்ய யோகம் ஒருவருக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அளிக்கிறது.

ஒரு புறம் புதாதித்ய யோகம் என்றால், இதனுடன் சுக்கிரனும் விருச்சிக ராசியில் இணைந்திருப்பது நிச்சயமாக பலருக்கு நல்ல பலனைத் தரும். இருப்பினும், 4 ராசிகளுக்கு இந்த இணைவு மிகவும் நன்மை பயக்கும்.  

ரிஷபம்: ஜோதிடத்தின் படி, புதன் 5 மற்றும் 2 ஆம் வீட்டை ஆளும் கிரகம். புதனின் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். உங்களின் வேலையிலும் லாபம் கிடைக்கும். ஏழாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திருமண வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். மேலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனியுடன் சந்திரன் இணைந்ததால் ஏற்பட்ட புனர்ப்பு தோஷம்

கடகம்: கடக ராசிக்கு 2வது வீட்டை ஆளும் கிரகம் சூரியன். நவம்பர் மாத கிரக மாற்றங்களினால் கடக ராசிக்காரர்களின் நிதி நிலை பலப்படும். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நன்றாக இருக்கும், வணிகம் அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் வளர்ச்சி பெறுவார்கள். தங்களுடைய சிறந்த நண்பர்களையும் கண்டுபிடிக்க இந்த சமயம் உகந்ததாக இருக்கும்.

துலாம்: 2022 நவம்பரில் சூரியன் மற்றும் புதன் சஞ்சாரத்தினால், துலாம் ராசிக்காரர்களின் வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், மேலும் தொழிலில் வெற்றியும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிறைந்த சூழல் நிலவும். சுக்கிரன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயங்கள் ஏற்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திருமணத் தடையா? ராகு தோஷமா? ஏழில் ராகுவா? ராகு தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News