பூமி கிரகத்துடன் பல்வேறு ஒற்றுமைகளை கொண்டிருப்பதாக கூறப்படும் சுக்கிரன் கிரகமானது நரக கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நரக கிரகத்தில் உள்ள தரையமைப்புகள், மடிப்புகள் எரிமலைகள் என மேற்பரப்பு அம்சங்களை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகளின் அவதானிப்புகளின்படி, சுக்கிரன் கிரகத்தில் ஒரு காலத்தில் டெக்டோனிகல் செயலில் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.
பூமியின் இரட்டை கிரகம் என்று அழைக்கப்படும் சுக்கிரனுக்கு பூமியுடனான தொடர்பு என்ன என்பது தெரியவில்லை என்றாலும், இரண்டு கிரகங்களுக்கும் இடையே மேலும் மேலும் பல அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகள் இருப்பதை விஞ்ஞானிகளின் அண்மை ஆய்வு கண்டறிந்துள்ளது.
மிகவும் வெப்பமான சுக்கிரன் கிரகம், அடர்த்தியான வளிமண்டலங்களில் ஒன்று ஆகும். சல்பூரிக் அமிலம் கொண்ட அடர்த்தியான மேகப் போர்வையைக் கொண்டுள்ள வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, கிரகத்தின் சராசரி வெப்பநிலையை சுமார் 870 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுக்கு வெப்பமாக்குகிறது. சுக்கிரன் கோளில் உள்ள வெப்பமானது ஈயத்தையும் உருக்கிவிடும் அளவில் கடும் வெப்பத்தைக் கொண்டது.
தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள தரவுகளின்படி, சுக்கிரனின் நிலப்பரப்பில் உள்ள மடிப்புகள் மற்றும் எரிமலைகள் போன்ற அம்சங்கள், இங்கு ஒரு காலத்தில் டெக்டோனிகல் செயலில் இருந்தது என்பதைக் குறிக்கிறது. டெக்டோனிக் செயல்பாடு தான், பூமியில் கண்டங்களை உருவாக்கியது என்பதும், இதுமட்டுமே, கிரகங்களில் பூமியில் மட்டுமே ஏற்பட்ட ஒரு நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளி கிரகம் எனப்படும் சுக்கிரனின் மேற்பரப்பில் "டெசெரே" எனப்படும் பீடபூமிகள் இருப்பதால், இந்த கிரகம் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தீவிர டெக்டோனிக் செயல்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் Monash University School of Earth, Atmosphere and Environment மையம் ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய மூத்த விஞ்ஞானி Fabio Capitanio இந்த ஆய்வு மற்றும் அதன் அவதானிப்புகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
விஞ்ஞானிகளின் அறிக்கை
860 டிகிரி பாரன்ஹீட் (460 டிகிரி செல்சியஸ்) மேற்பரப்பு வெப்பநிலை கொண்டுள்ள வெள்ளி கிரகத்தில் டெக்டோனிக்ஸ் தட்டு இல்லாததால், மடிப்புகள் எரிமலைகள் போன்றவை இருக்கும் என்று இதுவரை யாரும் நினைத்ததில்லை, இவை நமது பூமி கிரகத்தில் மட்டுமே இருக்கும் புவியியல் அம்சங்கள் என்று அறிக்கை கூறுகிறது.
நாசாவுடன் இணைந்து செய்யப்பட்ட இந்த ஆய்வானது, கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது தொடர்பான இதுவரையிலான நமது புரிதலுக்கு மாறாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்...
இஷ்தார் டெர்ரா மலைப்பகுதிகள்
வெள்ளி கிரகத்தில் உள்ள இஷ்தார் டெர்ரா ஹைலேண்ட்ஸ் எனப்படும் அமைப்புகளை ஆய்வு செய்தபோது, அது திபெத்திய பீடபூமியைப் போலவே சராசரியாக சுமார் 2.5 மைல்கள் உயரம் கொண்ட பீடபூமியைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான ஆய்வறிக்கை நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளி கிரகத்தில் இந்த பகுதியின் இருப்பது என்பது, பூமியும் சுக்கிரனும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே மாதிரியான புவியியல் வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.
சுக்கிரனுக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பு
விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், சுக்கிரனுக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேலும் இது வெள்ளி கிரகத்தின் கடந்த காலத்தின் இயக்கவியல் தொடர்பான நமது அனுமானங்களை மாற்றும் வகையில் இருக்கிறது.
மேலும் படிக்க | சந்திரனில் லைட் ஹவுஸ் வைக்கும் நாசா! மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ