ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம் அடிக்கும்

Astrology: இந்த வாரத்தின் கிரக நிலைகள் 3 ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2022, 05:25 PM IST
  • ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடப்பு வாரம் (ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை) மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
  • அவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.
ஆகஸ்ட் 21 வரை இந்த 3 ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம் அடிக்கும் title=

ஜோதிடம்: ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் ராசி மாறுகிறார். அடுத்த நாள் கிருஷ்ணர் பிறந்த அஷ்டமி திதி தொடங்குகிறது. சிலர் வியாழனன்றும் சிலர் வெள்ளியன்றும் ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்தநாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறார்கள். ஆன்மீக கண்ணோட்டத்தில், இந்த இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகளும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் நடக்கின்றன. ஜோதிடத்தின் பார்வையில், இந்த வாரம், அதாவது ஆகஸ்ட் 15 முதல் 21 வரை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சூரியனின் சஞ்சாரம் மற்றும் இந்த வாரத்தின் கிரக நிலைகள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் பண ஆதாயத்தை உண்டாக்குகின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும். இவர்கள் பணக்காரர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார 3 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த ராசிக்காரர்கள் மீது பண மழை பொழியும்

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடப்பு வாரம் (ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை) மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில், அவர்கள் பெரும் தொகையை பெறுவார்கள். இவர்களுக்கு பல இடங்களிலிருந்து திடீர் பண வரவு இருக்கும். பல புதிய முக்கிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இது அவர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த நேரத்தில், நீங்கள் வீட்டு வேலைகளில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வார இறுதியில் சில நல்ல செய்திகளை நீங்கள் பெறக்கூடும்.

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஆகஸ்ட் 17 முதல் அமோகமாய் இருக்கும் 

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இது நாள் வரை சிரமமாக இருந்த அனைத்து விஷயங்களும் எளிதானவையாக மாறும். அவற்றிற்கு தீர்வு கிடைக்கும். கும்ப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையில் வெற்றி உண்டாகும். நிதி பிரச்சனைகள் நீங்கும். தொழிலதிபர்கள் தொழிலில் அதிக லாபம் பெறுவார்கள். இந்த வாரத்தின் வியாழக்கிழமை அவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப்படியான பலன்களை அளிக்கும். அவர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். பல நாட்களாக சிக்கியிருந்த பணம் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிகப் பணம் வரும். வேலை செய்பவர்களுக்கு, தொழிலில் ஏற்படும் மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | கிரக பெயர்ச்சி 2022: அடுத்த 4 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News