வக்ர நிவர்த்தி அடையும் புதனால் பம்பர் பலன்களை பெறும் ‘சில’ ராசிகள்!

ஞானத்தையும், அறிவாற்றலைத் தரும் புதன் தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், சில ராசிகள் இதனால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 02:32 PM IST
  • ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
  • வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும்.
வக்ர நிவர்த்தி அடையும் புதனால் பம்பர் பலன்களை பெறும் ‘சில’ ராசிகள்! title=

ஜோதிடத்தின்படி, குறிப்பிட்ட நேரங்களில் கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் பெயர்ச்சி ஒரு நபரின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஜனவரி 17-ம் தேதி கும்ப ராசியில் சனி பெயர்ச்சிக்குப் பிறகு, ஜனவரி 18-ம் தேதி, ஞானத்தையும், அறிவாற்றலைத் தரும் புதனும் தனுசு ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் இந்த நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும்,  குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு புதனின் வக்ர நிவர்த்தி சிறப்பான பலனை அள்ளித் தரப்போகிறது. இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சிம்மம் 

ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும். இந்த ராசியின் ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில்  வக்ர நிவர்த்தி ஆகிறது. இது குழந்தைகள், காதல் விவகாரம் மற்றும் உயர்கல்விக்கான வீடாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகளுடனான உங்கள் உறவு மேம்படும், மேலும் குழந்தைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பழைய முதலீடுகள் மூலம் பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் காதல் உறவுகளில் பலம் இருக்கும்.

மேலும் படிக்க | தை மாத ராசி பலன்: ஆரோக்கியத்தில் ‘சில’ ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை!

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நிலை மாற்றம் சாதகமாக அமையப் போகிறது, இந்த ராசியின் மூன்றாம் வீட்டில் இந்த வக்ர நிவர்த்தி நடக்கப் போகிறது என்று சொல்லுங்கள். இது தைரியம் மற்றும்  மன வலுவிற்கான  வீடாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த நேரம் நல்லது. இல்லற வாழ்க்கை மேம்படும். அதே சமயம் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பும் இந்த காலகட்டத்தில் இருக்கும். இக்காலத்தில் சொத்து முதலியவற்றை வாங்கலாம்.

தனுசு

ஜோதிட சாஸ்திரத்தின் படி, தனுசு ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைவது நிதி மற்றும் திருமண வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். ஜனவரி 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். இதற்குப் பிறகு, அவர்களின் சிறப்பான நாட்கள் தொடங்கும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. திருமண வாழ்வில் பலம் உண்டாகும். இது தவிர, கூட்டாண்மையில் வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானது. மறுபுறம், திருமணமாகாதவர்களுக்கு  திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News