மகாசிவராத்திரியில் உருவாகும் சுபயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், சிவனருள் கிட்டும்

Lucky Zodiac Signs of Mahashivratri 2024: இந்த சிவராத்திரியில் உருவாகும் சுபயோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் நன்மை ஏற்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 5, 2024, 01:37 PM IST
  • மகர ராசிக்காரர்களுக்கு சிவராத்திரிக்கு பிறகான காலம் வெற்றிகரமானதாக இருக்கும்.
  • பல சுப செய்திகளை பெறுவீர்கள்.
  • சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகாசிவராத்திரியில் உருவாகும் சுபயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், சிவனருள் கிட்டும் title=

Lucky Zodiac Signs of Mahashivratri 2024: ஆதியும் அந்தமும் இல்லாமல் உலகெங்கிலும் நிறைந்து இருக்கும் சிவபெருமான் இந்து சமயத்தின் மிக முக்கியமான கடவுளாக உள்ளார். பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளையும் காத்து ரட்சிக்கிறார். உலகம் முழுவதும் பல வடிவங்களில் பல பெயர்களைக் கொண்டு அவர் வியாபித்து இருக்கிறார்.

சிவனுக்கு உகந்த நாள் சிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்தசியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகின்றது. இந்த புனித நாள் அன்று தான் பரமசிவனுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இந்த நாளில் தான் ஜோதிர்லிங்கங்கள் தோன்றியதாகவும் ஒரு கூற்று உள்ளது.

பஞ்சாங்க கணக்கீடுகளின் படி இந்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மகாசிவராத்திரி (Mahashivratri) கொண்டாடப்படும். இந்த நாளில் பல சுபயோகங்களும் உருவாகின்றன. சிவராத்திரி அன்று பொதுவாக மக்கள் விரதம் இருந்து சிவபெருமானை (Lord Shiva) வழிபடுவது வழக்கம். கண் விழித்து அந்த முக்கண்ணனை வணங்கினால் வந்த கவலைகள் அனைத்தும் பனி போல் விலகும் என்பது ஐதீகம்.

இந்த மகாசிவராத்திரி அன்று கிரக நட்சத்திரங்கள் மிகவும் சுபமான இடங்களில் அமைந்திருக்கின்றன. மார்ச் எட்டாம் தேதி சூரியன் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் (Trigrahi Yog) உருவாகின்றது. இதற்கு ஒரு நாள் முன்னதாக புதன் பெயர்ச்சி ஆகி மீன ராசிக்கு வருகிறார். இதே நாளில் செவ்வாயும் பெயர்ச்சியாகி மகர ராசிக்கு செல்கிறார். இந்த கிரக மாற்றங்களால் ஆகும் சுபசேர்க்கையின் காரணமாக சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு சுபயோகம் உருவாகின்றது.

இந்த சிவராத்திரியில் உருவாகும் சுபயோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் நன்மை ஏற்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொங்கும். நிதிநிலை வலுவடையும். ஆன்மீக சிந்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். இது தவிர, சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனியால் உருவாகும் பிரச்சனைகளையும் சிவ பெருமான் சரி செய்து, இந்த ராசிகளுக்கு நன்மைகளை மட்டுமே அளிக்கிறார்.

மேஷம் (Aries) 

மேஷ ராசிக்காரர்களுக்கு சிவராத்திரி முதல் லாபகரமான காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசிக்காரர்களுக்கு நவராத்திரிக்கு பிறகு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடத்த முடியும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதிநிலை மேன்மை அடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்

துலாம் (Libra)

மகா சிவராத்திரி அன்று உருவாகும் சுபயோகத்தால் துலா ராசிக்காரர்கள் அதிகப்படியான நன்மைகளை அனுபவிக்க உள்ளார்கள். உங்கள் அனைத்து பணிகளையும் மிக சுலபமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வேலை இடத்தில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மேலும் படிக்க | Vijaya Ekadashi 2024: விஜய ஏகாதசி அன்று இந்த பொருட்களை தானம் செய்ய வேண்டாம்!

மகரம் (Capricorn)

மகர ராசிக்காரர்களுக்கு சிவராத்திரிக்கு பிறகான காலம் சொந்த வாழ்க்கையிலும் தொழில் முறை வாழ்க்கையிலும் வெற்றிகரமானதாக இருக்கும். பல சுப செய்திகளை பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வேலை அல்லது இப்பொழுது இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் கூடும்.

கும்பம் (Aquarius)

கும்பத்தில் தான் திரிகிரகி யோகம் உருவாகிறது. இது பல நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் பல வித லாபங்களை காண்பீர்கள். முன்னர் செய்த முதலீடுகளால் இப்பொழுது லாபம் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News