உதயமானார் சுக்கிரன்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்

Shukra Uday: சுக்கிரன் உதயமானதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 26, 2022, 03:24 PM IST
  • துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் நன்மை பயக்கும்.
  • துலா ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும்.
உதயமானார் சுக்கிரன்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும் title=

சுக்கிரன் உதயம்: ஜோதிடத்தில், சுக்கிரன் கிரகம் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு மற்றும் செழுமை ஆகியவற்றை அளிப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் சுப கிரகமாக இருப்பதால், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் அனுகூலமான இடத்தில் இருந்தால், அந்த நபர் ஆடம்பரமான, செழிப்பான வாழ்க்கையை வாழ்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் சுக்கிரன் அஸ்தமனமாகிவிட்டதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் பல ராசிக்காரர்களுக்கு தடைபட்டன. இதனுடன், அதன் மோசமான விளைவும் சில ராசிக்காரர்கள் மீது விழுந்தது. 

2022 நவம்பர் 20 அன்று சுக்கிரன் கிரகம் மீண்டும் உதயமானது. இதன் மூலம் சிலரின் பொன்னான நாட்களும் துவங்கியுள்ளன. சுக்கிரன் உதயமானதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சுக்கிரனின் உதயம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் கிரகம் ஆவார். இவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் இப்போது நடக்கும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். கூட்டாண்மைப் பணி சாதகமாக அமையும்.

மேலும் படிக்க | ஏழரை சனியால் பாதிப்பா? இந்த பரிகாரங்கள் போதும், அள்ளிக்கொடுப்பார் சனி பகவான் 

துலாம்: 

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் நன்மை பயக்கும். துலா ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வருமான அதிகரிப்பு பொருளாதார நிலையை பலப்படுத்தும். திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் தற்போது உண்டாகும். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் உதயம் மிகவும் சுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குறிப்பாக கூட்டாண்மையில் வேலை செய்பவர்கள் மிகுந்த பலன் அடைவார்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்லான அதிக வாய்ப்புகள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News