வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி: புதன் வக்ர பெயர்ச்சியால் இவர்களுக்கு நல்ல காலம்

Mercury Retrograde: புதனின் இந்த வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கும் மேன்மையான சுப பலன்களை அள்ளித்தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2023, 04:45 PM IST
  • வக்ர புதனின் இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.
  • புதிய சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும்.
வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி: புதன் வக்ர பெயர்ச்சியால் இவர்களுக்கு நல்ல காலம் title=

புதன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: புதன் கிரகம் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் செல்வத்தின் காரணியாக இருக்கிறார். சமீபத்தில் புதனின் இயக்கம் மாறியது. அவர் ஆகஸ்ட் 24 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். செப்டம்பர் 15ஆம் தேதி வரை அவர் இந்த நிலையிலேயே இருப்பார். 

பொதுவாகவே அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதனின் வக்ர நிலையும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மாற்றங்களை கொண்டு வரும். அவருடைய இந்த மாற்றம் புத்திசாலித்தனம், பேச்சு, பணம் போன்ற அம்சங்காளில் மக்களை பாதிக்கும். சில ராசிக்காரர்கள் இதனால் நல்ல பலன்களை அடைவார்கள், மற்றவர்கள் எதிர்மறையாக பாதிக்கப்படுவார்கள். எனினும், புதனின் இந்த வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கும் மேன்மையான சுப பலன்களை அள்ளித்தரும். இவர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மிகுந்த மகிழ்ச்சியும், முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

புதனின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதன் கிரகம் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் செல்வத்தின் குறியீடாக உள்ளார். இது இந்த 17 நாட்களில் உங்களுக்கு திடீர் பண ஆதாயங்களைத் தரும். நிலுவையில் உள்ள பணத்தையும் பெறலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவதோடு, மரியாதையும் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு பண வரவு அதிகமாகும். வேலை மாறுவதற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.

மிதுன ராசி

புதன் மிதுன ராசிக்கு அதிபதி ஆவார். இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி மிகுந்த பலன்களைத் தரும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் கூடும். லாபம் அதிகரிக்கும். லாட்டரி, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | கோடி கோடியாக செல்வம் குவியும்.. குருவால் இந்த ராசிர்களுக்கு கோடீஸ்வர யோகம்

கடக ராசி

வக்ர புதனின் இயக்கம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பொருள் இன்பம் பெறுவீர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். புதிய சொத்து, வாகனம் வாங்கும் யோகம் இப்போது உண்டாகும். மதிப்புமிக்க ஒன்றை வாங்கும் திட்டம் நிறைவேறும். உங்களின் தன்னம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், உங்கள் வாழ்க்கை துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் இந்த நேரத்தில் புதிய பொறுப்ப்புகளைப் பெறலாம்.

கன்னி ராசி

புதனின் வக்ர இயக்கத்தால் உருவான மகா விபரீத ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் ஆதாயம் அடைவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வருமானம் கூடும். பொருட்கள், பங்குச் சந்தை, தங்கம்-வெள்ளி மற்றும் சொத்து வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் குறிப்பாக நன்மை பயக்கும். லாபம் அதிகரிக்கும்.

துலா ராசி

புதனின் வக்ர இயக்கம் துலாம் ராசியினருக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக வியாபாரிகளுக்கு புதன் பெரிய பலன்களை தரக்கூடியது. நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெறலாம் அல்லது ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தலாம். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியைப் பெறலாம். உங்களின் சில பெரிய ஆசைகள் நிறைவேறலாம், அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

(பொருப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் வக்ரப் பெயர்ச்சியால் லட்சுமி குபேரனின் அருளாசி! 4 ராசிகளுக்கு சூப்பர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News