ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியையும் சேர்ந்தவர்களின் இயல்பு மற்றும் நடத்தை விவரிக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தைப் போலவே, அந்த நபரின் ஆளுமை என்ன, அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும் ராசியின் மூலம் அறியலாம். இன்று, அத்தகைய ராசிக்காரர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில், சில நேரங்களில் மிகவும் சுயநலமாக நடந்து கொள்ளும் அல்லது தங்கள் கனவுகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய ச்ல ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்தராசிகள் எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் இலக்குகளை நிறைவேற்றுகிறார்கள்.
சுயநலம் மிகுந்த ராசிக்காரர்கள்
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். வேலையை அவர்கள் கையில் எடுத்தவுடன், அதை முடித்த பின்னரே அவர்கள் மறு வேலை பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் பிடிவாத எண்ணத்துடன் அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். இதனால், பிறர் அவர்களை சுயநலவாதிகள் என்று கருதுகிறார்கள்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்கள் ஆகாயக் கோட்டைகள் கட்டுவதில் வல்லவர்கள். அதே சமயம் சிந்தித்து செயல்படுபவர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற, அவர்கள் எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். இந்த விவகாரத்தில் பல முக்கிய விஷயங்களை புறக்கணிக்கவும் தயங்குவதில்லை. இந்த காரணத்திற்காக, பலர் இவர்களை தவறாக புரிந்துகொள்கிறார்கள். இது தவிர, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள சமரசங்களுக்கு தயாராக இருக்கும் பழக்கம் அவர்களின் இமேஜையும் சேதப்படுத்துகிறது.
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களை முன்னிலைப்படுத்தவே விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம். அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் அர்ப்பணிப்புடன் இருந்தாலும், தங்களை முன்னணியில் கொண்டு வருவதில், அவர்கள் தங்கள் நெருங்கியவர்களை புறக்கணிக்கிறார்கள்.
துலாம்:
துலாம் ராசிகள் இயற்கையில் மிகவும் சமநிலையானவர்கள். தங்கள் இலக்குகளை நோக்கி மிகவும் பொறுப்புடன் இருப்பார்கள். அவர்களும் தங்கள் வேலையை நிறைவேற்றிக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன தடைகள் அல்லது சவால்கள் வந்தாலும், தனது வேலையை சாதித்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதனால் சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ளவும் தவறுவதில்லை. இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். ஆனால் பொதுவாக பிறர் அவற்றைக் கீழ்த்தரமாகக் கருதுகின்றனர்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் தீவிரம் காட்டுவார்கள். யாருடனும் தேவையில்லாமல் நேரத்தை செலவிட மாட்டார்கள், தேவையில்லாமல் பேச மாட்டார்கள். காரிய சாதித்து கொள்ள ஏமாற்று வேலையில் இறங்குவதை கூட தயங்குவதில்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை பற்றியும் கவலைப்படுவதில்லை. இதனால் பல சமயங்களில் பிறர் அவரை ஏமாற்றுக்காரர் என்று அழைக்கிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறூபேற்காது.)
மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ