300 ஆண்டுக்கு பிறகு அபூர்வ யோகம்.. விநாயகரால் இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்

300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை விநாயக சதுர்த்தி அன்று மிகவும் அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. எனவே, விநாயக சதுர்த்தி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2023, 04:30 PM IST
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.
  • வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
  • இனிமையாகப் பேசுவதன் மூலம் அனைவரின் மனதையும் வெல்ல முடியும்.
300 ஆண்டுக்கு பிறகு அபூர்வ யோகம்.. விநாயகரால் இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம் title=

விநாயக சதுர்த்தி ராசி பலன் 2023: ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தி விழா, அறிவு மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கடவுளான விநாயகப் பெருமானின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை விநாயக சதுர்த்தி அன்று மிகவும் அற்புதமான யோகங்கள் உருவாகின்றன. 300 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி சுப தினத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த யோகங்களான பிரம்ம யோகம், சுக்ல யோகம், சுப யோகம் என மூன்று யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகின்றது. இதனால சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. அதே நேரத்தில், விநாயக சதுர்த்தியின் புனித நாள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, விநாயக சதுர்த்தியின் அற்புதமான சேர்க்கைகள் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு விநாயக சதுர்த்தி நாள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். பல ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த வேகம் நிறைவேறும். செல்வம் பெருகும், வாழ்வில் செழிப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, உங்கள் நாள் சிறப்பாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மாம்பழப் போட்டியில் தம்பி முருகனை வென்ற கணபதியின் சந்திர பயணம்! பிள்ளையார் சதுர்த்தி

மிதுனம்: மிதுன ராசிக்கு சுப யோகங்களின் மூலமாக எதிர்பாராத சில நல்ல விஷயங்கள் தேடி வரும். தொழில், வேலையில் நீங்கள் முடியாது என நினைத்த சில விஷயங்களை செய்து முடிக்கவும், சாதக முடிவுகளையும் பெறுவீர்கள். உங்களின் வருமானம் மிகப் பெரியளவு உயர்வு பெறும். திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும்.

துலாம்: விநாயக சதுர்த்தியின் அற்புதமான யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாள். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் எதிரிகளும் இன்று உங்களுக்கு ஆதரவளிப்பார்களாக இருப்பார்கள் இருப்பினும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இனிமையாகப் பேசுவதன் மூலம் அனைவரின் மனதையும் வெல்ல முடியும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு விநாயக சதுர்த்தி நாள் அனுகூலமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றும். வியாபாரத்தில் பெரிய அளவில் சாதிக்க முடியும். அதே நேரத்தில், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பான சில நல்ல செய்திகளையும் பெறலாம்.

மகரம்: மகர ராசியினருக்கு விநாயகர் சதுர்த்தி தினத்தில் உருவாகக்கூடிய அபரிமிதமான யோகங்களால் நல்ல லாபம் உண்டாகும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் வருமானம் பெருக வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பிரச்னை தீரும். தடைப்பட்டு வந்த எந்த ஒரு வேலையும் செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்கு மோதக நைவேத்தியம்! தொந்தி பிள்ளையாருக்கு ராகிக் கொழுக்கட்டை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News