Pradosham | ஐப்பசி பிரதோஷம்! எல்லா பாவங்களையும் போக்கும் - மிஸ் பண்ணிடாதீங்க

pradosham | பிரதோஷம் இந்த முறை ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி வருகிறது. இது பாவ பிரதோஷம், எல்லா பாவங்களையும் போக்கக்கூடியது என்பதால் இந்த பிரதோஷத்தின் விரத முறை மற்றும் கூடுதல் மகிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 20, 2024, 05:41 PM IST
  • ஐப்பசி 2024 பிரதோஷ பலன்கள்
  • பாவங்களை போக்கும் பிரதோஷம்
  • தலைமுறை பாவங்கள் நீங்கும்
Pradosham | ஐப்பசி பிரதோஷம்! எல்லா பாவங்களையும் போக்கும் - மிஸ் பண்ணிடாதீங்க title=

pradosham News Tamil | எல்லா பிரச்சனைகளையும், சிக்கல்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யகூடிய வல்லமை பிரதோஷ வழிபாட்டுக்கு உண்டு. முன்னோர் சாபம், பகை, பாவம் என தலைமுறைகளை பாதிக்கக்கூடிய தோஷங்களைக் கூட பிரதோஷ வழிபாடு மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாதம் வரும் திரியோதசி திதி பிரதோஷத்துக்கு என சிறப்பு இருக்கும் நிலையில், ஐப்பசி 12 ஆம் தேதி, அக்டோபர் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரக்கூடிய பிரதோஷம் எல்லா பாவங்களையும், சாபங்களையும் போக்கக்கூடிய பாவ பிரதோஷம் ஆகும். மிகச் சிறப்பு வாய்ந்த இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஏராளமான நன்மைகளும், உங்கள் தலைமுறைகளை பாதிக்கக்கூடிய சிக்கல்களில் இருந்தும் விமோச்சனம் பெறலாம்.

பிரதோஷ வழிபாடு என்றால் என்ன? 

சிவ பெருமானை வழிபட உகந்த நேரம் மாலை நேரத்தில் வரக்கூடிய பிரதோஷ நேரமும். தினமும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக ஒன்றரை மணி நேரமே பிரதோஷ காலம் ஆகும். பொதுவாக மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை இந்த பிரதோஷ நேரம் இருக்கும். தினமும் வரும் பிரதோஷம் நித்திய பிரதோஷம் ஆகும். இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் இரண்டு முறை மட்டும் திரயோதசி திதியோடு பிரதோஷம் வரும். ஒன்று வளர்பிறை பிரதோஷம், இன்னொன்று தேய்பிறை பிரதோஷம். இந்த இரு நாட்களிலும் மாலை நேரத்தில் சிவ பெருமான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நேரத்தில் நீங்கள் சிவபெருமானை நினைத்து வழிபடும் காரியங்கள் அனைத்தும் வெற்றியையே கொடுக்கும். 

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம்... பணமழை பொழியும்

ஐப்பசி பிரதோஷத்தின் மகிமைகள்

இந்த மாதம் ஐப்பசி 12, அக்டோபர் 29 ஆம் தேதி செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம், பாவம் பிரதோஷம் எனப்படும். கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படக்கூடிய பிரதோஷமும் ஆகும். இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் அனைத்து துன்பங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும். அன்றைய நாளின் மாலையில் வழிபாடும் நடைபெறும். தன்வந்திரி, செல்வத்தின் அதிபதியான குபேரன் மற்றும் அன்னை லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த வழிபாட்டில் தவறாமல் கலந்து கொண்டால் தலைமுறைகளை பாதிக்கும் சாபங்களில் இருந்து விமோச்சனம் பெறலாம். 

ஐப்பசி மாத பிரதோஷ நேரம்

பஞ்சாங்கத்தின்படி, ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி தேதி அக்டோபர் 29 காலை 10:31 மணிக்கு தொடங்கி அக்டோபர் 30 அன்று மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். பிரதோஷ நாளில் மிக முக்கியமாக மாலையில் பிரதோஷ வழிபாடு செய்வது முக்கியம். அந்தவகையில், மாலை 5:38 மணி முதல் இரவு 8:13 மணி வரை பாவம் பிரதோஷத்தில் பூஜை செய்ய உகந்த நேரம். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் சாபங்களில் இருந்து உங்கள் தலைமுறைக்கே விமோச்சனம் கிடைக்கும்.

பிரதோஷ விரதம்

நீங்கள் பிரதோஷத்துக்கு விரதமும் இருக்கலாம். காலை முதல் ஒருவேளை உணவருந்தாமல் இருந்து சிவ பெருமானை வழிபட்ட பிறகு உணவருந்தலாம். உடல் நலம் முடியாதவர்கள் உண்ணா விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாபம், பாவங்கள் இருக்கிறது என கருதுபவர்கள் குடும்பத்தோடு அருகில் இருக்கும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். அப்போது, அனைத்து சிக்கல்களில் இருந்து விமோச்சனம் கிடைக்குமாறு வேண்டினால், உங்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு நல்ல வாழ்க்கை தொடக்கம் கிடைக்கும். 

மேலும் படிக்க | படுக்கறையில் மனைவி இப்படி படுத்து தூங்கினால்... இன்பம் இரட்டிப்பாகும் - வாஸ்து டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News