16 நாட்களுக்கு பிறகு 4 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பணம் கிடைக்கும்

Venus Transit 2023: சுக்கிரன் பணம்-புகழ் மற்றும் செல்வத்தை அளிப்பவர். விரைவில் சுக்கிரன் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் ஜூலை 7 வரை இந்த ராசியில் தான் இருக்கிறார். இதன் போது சுக்கிரன் 4 ராசிக்காரர்களை செல்வந்தர்களாக்குவார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 16, 2023, 12:50 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் செல்வச் செழிப்பு கிடைக்கும்.
  • வரும் மே 30ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் இடப் பெயர்ச்சி
  • தொழிலை விரிவுபடுத்தி நல்ல லாபம் ஈட்ட திட்டமிடுவீர்கள்.
16 நாட்களுக்கு பிறகு 4 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பணம் கிடைக்கும் title=

சுக்கிரன் ராசி பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின்படி, செல்வம்-புகழ், காதல்-அன்பு, ஈர்ப்பு-அழகு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் விளங்குகிறார். ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை செல்வம் மற்றும் செழிப்புடன் நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அதேபோல காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கையும் நினைத்ததை விட அற்புதமாக அமையும். இந்த நிலையில் வரும் மே 30ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். சந்திரனின் ராசியான கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி அடைவது அனைத்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் சுக்கிரன் ஜூலை 7 வரை கடக ராசியிலேயே தான்இருப்பார், எனவே இந்த நேரத்தில் இந்த பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த செல்வமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சியால் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள்

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் தொழில மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். பணம் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை மிகவும் கவனித்துக் கொண்டு உங்களுடன் ஒத்துழைப்பார்கள். சில ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்வில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருகும்.

மேலும் படிக்க | ஒரே மாதம்..சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளின் வாழ்வில் சலசலப்பு ஏற்படும்

கடக ராசி: கடக ராசியிலேயே சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், இந்த ராசிக்காரர்களுக்கு அளவற்ற செல்வத்தைப் பெறுவீர்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உங்கள் ஆளுமையின் கவர்ச்சி அதிகரிக்கும். உங்கள் அழகில் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கான ஆடைகள், நகைகள், அணிகலன்கள் வாங்குவீர்கள். அத்துடன் வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக செயலப்படும்.

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல வகைகளில் பலன்களைத் தரும். உங்கள் இயல்பில் அற்புதமான மற்றும் நல்ல மாற்றங்கள் காணப்படும். மதப் பணிகளில் உங்கள் ஆர்வம் கூடும். மதப் பயணம் செல்வீர்கள். புதிய நபர்களுடன் இணைந்திருங்கள் மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழுங்கள்.

மீன ராசி: சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்க்கையைத் தரும். உங்களின் துணையுடன் நன்றாகப் பழகுவீர்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறைவேறும் நோக்கில் செல்வீர்கள். குழந்தைகள் தொடர்பான இனிமையான தகவல்களைப் பெறலாம். நீங்கள் ஒரு புதிய வீடு-கார் அல்லது ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தி நல்ல லாபம் ஈட்ட திட்டமிடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த 7 ராசிகளுக்கு அடிக்கப்போகும் லக்கி ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News