பேஸ்புக் நிறுவனத்தின் சர்வதேச விவகாரம் மற்றும் தொடர்பு பிரிவுக்கு தலைமை பொருப்பினை பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமர் நிக் க்ளெக் ஏற்கவுள்ளார்!
பிரிட்டனில் 2010-15 ஆண்டுகளில் துணை பிரதமராக இருந்தவர் நிக் க்ளெக். லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்த இவர் கடந்த ஆண்டில் இருந்து அரசியலில் இருந்து ஒதுங்கினார். இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களை கையாளும் பிரிவு மற்றும் தொடர்பு பிரிவுக்கு நிக் தலைமை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிக் நியமனத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க் மற்றும் இணை இயக்குநர் ஷெர்ய்ல் சான்பெர்க் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியதாக தெரிகிறது.
அடுத்தாண்டு துவக்கத்தில் பேஸ்புக் சர்வதேச விவகாரம் மற்றும் தொடர்பு பிரிவு தலைமை பொறுப்பை ஏற்க உள்ள நிக், குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேற இருக்கிறார்.
பயனர்கனின் தகவல்களை கசித்த விவகாரம் உள்பட பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள பேஸ்புக் சமீப காலமாக வணிக ரீதியாகவும் பலத்த அடியை சந்தித்து வருகிறத். தேர்தல் தலையீடு, தகவல் திருட்டு என அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும் நிலையில், நிக் க்ளெக்-கின் நியமனம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியல் சூழலை நிக் மிக திறமையாக கையாள்வார் என்பதால் இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.