Viral Video Of Monkey CPR : அன்பே சிவம் படத்தில் “அந்த மனசுதான் சார் கடவுள்” என்று கடைசியாக ஒரு டைலாக் பேசுவார், கமல்ஹாசன். நாமும் யாரேனும் நம்மிடம் அன்பாக அல்லது மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டால், இந்த டைலாக்கை உபயோகித்திருப்போம். இப்படி, மேன்மையான மனிதத்துவத்தை பறைசாற்றும் ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் அந்த வீடியோவில், குரங்கு ஒன்று மயங்கிய நிலையில் மூச்சு பேச்சின்றி கிடக்கிறது. அந்த குரங்கை ஓடி சென்று, தன் கைகளில் வைத்துக்கொள்ளும் டாக்சி ஓட்டுநர், அதன் மார்பின் மீது தொடர்ந்து கை வைத்து அழுத்தி CPR (உயிர் மீட்பு சுவாசம்) பயிற்சியை கொடுக்கிறார்.
Incredible moment taxi driver brings a monkey back to life with CPR pic.twitter.com/hZ5RMCY4QG
— Nature is Amazing (@AMAZlNGNATURE) July 8, 2024
எவ்வளவு முயற்சி செய்தும் அந்த குரங்கு எழுந்திருக்கவே இல்லை. இருந்த போதிலும் விடாமல் போராடிய அந்த டாக்சி டிரைவர், வாயுடன் வாய் வைத்து அதற்கு மூச்சு பயிற்சியை கொடுக்கிறார். அப்படியும் குரங்கு எழுந்திருக்காததால் தொடர்ந்து மார்பில் கையை வைத்து அழுத்தியும், வாயுடன் வாய் வைத்து சுவாசம் கொடுத்தும் பார்க்கிறார்.
மேலும் படிக்க | பாம்பிடம் பல்பு வாங்கிய நபரின் வைரல் வீடியோ
இடையில் “எழுந்திரு சாமி..எழுந்திரு சாமி..” என்றும் கூறுகிறார். ஒரு வழியாக அந்த குரங்கு கண் விழிக்கிறது. குரங்கு உயிர் பிழைத்ததை பார்த்தவுடன் அந்த ஓட்டுநருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. உடனே எழுந்து “ஆ..எழுந்துட்டான்டா..எட்றா வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு..” என்று கூறி மகிழ்ச்சி பெருக்குடன் காரை நோக்கி ஓடுகிறார். இந்த வீடியோவை பார்த்த மக்கள், அந்த ஓட்டுநரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
CPR செய்வது எப்படி?
- மிருகம் அல்லது யாரேனும் ஒருவர் விபத்தில் அடிப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- முதலில் அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வேண்டும். அவசர உதவி எண்ணுக்கு டயல் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
- அடிப்பட்ட நபரின் தோள் மற்றும் முகத்தில் மெதுவாக அடித்து அவர்களை அழைக்க வேண்டும். அவர்கள் மயக்கத்தில் இருந்தால் விழித்துக்கொள்வர். அப்படி இல்லை என்றால் CPR செய்ய வேண்டும்
- அவரை முதலில் தரையில் படுக்க வைத்து தலையை மட்டும் கொஞ்சம் மேலாக பிடிக்க வேண்டும்.
- மூச்சு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
- அந்த நபர் அருகே மண்டியிட்டு அமர்ந்து கைகளை மார்பின் நடுப்பகுதியில் வைத்து அழுத்த வேண்டும்.
- ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 120 compressions வரை கொடுக்க வேண்டும்.
- 30 compressionsற்கு பிறகு 2 முறை வாயுடன் வாய் வைத்து சுவாசம் கொடுக்க வேண்டும்.
- அப்படி கொடுக்கும் போது, அவர்களின் நாசியை மூட வேண்டும்.
- இப்படி செய்த பிறகு அவர் மூச்சு விடுகிறாரா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | CPR செய்து பாம்புக்கு உயிர் தந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ