Viral Video: ஆக்ரோஷமாக சண்டையிடும் ராஜ நாகங்கள்; திகிலூட்டும் வீடியோ

Viral Video of King Cobra: இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு,  ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும் ஆர்வமுடன் பார்க்கப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2022, 11:52 AM IST
  • இரண்டு கொடிய ராஜ நாகப்பாம்புகள் மோசமாக பின்னிப் பிணைந்துள்ளன.
  • பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது.
  • இது வாழ்வா சாவா என்ற போராட்டமாக தெரிகிறது.
Viral Video: ஆக்ரோஷமாக சண்டையிடும் ராஜ நாகங்கள்; திகிலூட்டும் வீடியோ title=

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு,  ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும்  அதிகம் ஆர்வமுடன் பார்க்கப்படுகின்றன. 

பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும் சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். அதனால் பாம்பு வீடியோக்கள் எளிதில் வைரலாகின்றன

சண்டை என்பது பூமியில் வாழும் எந்த ஒரு உயிரினத்தின் பொதுவான ஒரு இயல்பு. அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, பறவையாக இருந்தாலும் சரி, பரஸ்பரம் சண்டையிடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். 

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

இப்போது இதேபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு கொடிய ராஜ நாகப்பாம்புகள் மோசமாக பின்னிப் பிணைந்துள்ளதை காணலாம். இரண்டும் கடைசி மூச்சு வரை பரஸ்பரம் சண்டையிடுவதைக் காணலாம். இந்த பயங்கரமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வனப்பகுதியில் திடீரென இரண்டு ராஜ நாகப்பாம்புகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதை சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காணலாம். இதன் சண்டையை பார்த்தாலே இன்று இதில் இரு பாம்பு தான் பிழைக்கும் என்று என்னும் வகையில், இது வாழ்வா சாவா  என்ற போராட்டமாக தெரிகிறது. 

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

இது போன்ற பாம்புகளின் சண்டையை இதுவரை பார்திருக்கவே மாடோம் என்பது போல் இந்த சண்டை அவ்வளவு கொடூரமாக உள்ளது. இந்த வீடியோ டெய்லி மெயில் என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு ராஜ நாகங்களும் கடைசி மூச்சு வரை சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இதற்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திகிலூட்டும் வீடியோ இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News