Viral Video: நடுவானில் அறுந்து போன பாராசூட் கயிறு; அதில் பறந்த தம்பதியர் நிலை என்ன..!!

குஜராத்தைச் சேர்ந்த தம்பதியினர், டையூவில் பாரசூட்டில் பறந்த போது, ​​பாராசூட் கயிறு அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 17, 2021, 03:04 PM IST
Viral Video: நடுவானில் அறுந்து போன பாராசூட் கயிறு; அதில் பறந்த தம்பதியர் நிலை என்ன..!! title=

குஜராத்தைச் சேர்ந்த தம்பதியினர், டையூவில் பாரசூட்டில் பறந்த போது, ​​பாராசூட் கயிறு அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை அஜித் கதாடென்ட் மற்றும் அவரது மனைவி சரளா கதாடென்ட் குஜராத்தின் உனா கடற்கரையில்  பாராசெயிலிங் ( Parasailing ) சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. சவாரி தொடங்கிய சில நிமிடங்களில், அதை இழுத்துச் சென்ற விசைப் படகில் கட்டப்பட்டிருந்த அவர்களது பாராசூட்டின் கயிறு அறுந்தது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அஜித்துக்கோ அல்லது அவரது மனைவி சரளாக்கோ காயம் ஏற்படாததால் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். அவர்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், என்பதோடு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்டனர். அஜித் கதாட்டின் மூத்த சகோதரர் ராகேஷ் தரேச்சாவும் அந்த இடத்தில் இருந்தார், அவர்களின் சாகசத்தை வீடியோ (Viral Video) எடுத்த போது, இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பதிவாகியது. 

“நான் வீடியோவை பதிவு செய்து கொண்டிருந்தேன், கயிறு அறுந்தபோது என்ன செய்வது என்று தெரியவில்லை. என் சகோதரனும் அண்ணியும் நடு வானில் இருந்து இருந்து விழுவதை என்னால் பார்க்க முடிந்தது, அந்த நேரத்தில் பதற்றம் அதிகமாகி என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்று ராகேஷ் கூறினார்.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

இந்த பகீர் வீடியோவை ட்விட்டரில் (Twitter) பகிர்ந்துள்ள பயனர் ராகுல் தரேச்சா அதிகாரிகளிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

 

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தம்பதியர் அதிர்ச்சியில் உரைந்தனர். “லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்ததன் காரணமாக நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். ​​​​என் மனைவி அதிர்ச்சியில் இருந்தாள். அவளால்  சில நிமிடங்கள் பேச முடியவில்லை. எங்கள் பாராசூட் நங்கூரமிடப்பட்டிருந்த விசைப் படகின் உதவியைக் கோரினோம். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, உயிர்காப்பாளர்கள் மற்றொரு விசைப் படகில் வந்து எங்களைக் காப்பாற்றினர்" என்று அஜித் கூறினார்.

அஜித் தொழில் ரீதியாக பல்நோக்கு சுகாதார பணியாளர் என்றும், சரளா ஒரு ஆசிரியை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | மின்வேலியில் சிக்கி பலியான குட்டி யானை, எழுப்ப முயலும் தாய் யானை, கண் கலங்க வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News