அமெரிக்காவை கோடீஸ்வர தொழிலதிபரும், டெஸ்லாவின் (Tesla) தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon Musk), உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர். தற்போது அவரது 'இரட்டை சகோதரர்' போல் தோன்றும் ஒரு நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் காணப்படும் நபர் எலோன் மஸ்க்கின் கார்பன் அகாப்பியாக உள்ளார். இவர் இரட்டை சகோதரர் என சிலர் கூறி வருகின்றனர்.
இந்த வீடியோ சீனாவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் காணப்படும் மனிதர் எலோன் மஸ்க்கைப் போலவே இருக்கிறார். வீடியோவைப் பார்த்தால் இவர்தான் எலோன் மஸ்கோ என நினைக்க தோன்றும். இந்த வீடியோவில் (Viral Video) எலோன் மஸ்க் போல தோற்றமளிக்கும் நபர் சீனாவின் ஷுசோவில் வசிப்பவர். இந்த நபரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் டிக்டாக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வீடியோவை இங்கே காணலாம்:
Have you guys met Elon’s brother, Yi Long Musk? #elonmusk #twin pic.twitter.com/3fpwUwAZck
— Jackfroot (@jackfrootnews) December 22, 2021
ALSO READ | மேக்கப் மூலம் ஷாருக்கானாக மாறிய பெண்! வைரலாகும் வீடியோ!
எலோன் மஸ்க் கூறியுள்ள கருத்து
இந்த வீடியோவை பார்த்த பலர் டெஸ்லா CEO எலோன் மஸ்க்கை (Tesla CEO Elon Musk) டேக் செய்தனர். இது குறித்து எலோன் மஸ்க் தனது பதிலையும் தெரிவித்துள்ளார். நானும் தோற்றத்தில் கொஞ்சம் சீனர் தான் என்றார் மஸ்க். இந்த வீடியோவில், கருப்பு உடை அணிந்த ஒருவர் சொகுசு காரின் முன் நிற்பதைக் காணலாம். கேமராமேன் முன் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்திருக்கிறார். தோற்றத்தில், அந்த நபர் எலோன் மஸ்க் போலவே இருக்கிறார்.
அந்த நபர் சீன மொழியில் பேசுவதை வீடியோவில் கேட்கலாம். இந்த நபர் தன்னை எலோன் மஸ்க் போல தோற்றமளிக்க 'Artificial Intelligence Face Swap Technology' யை நாடியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன் முகத்தை எலோன் மஸ்க்கின் முகத்துடன் மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | Viral Video: ‘என்ன கொடுமை சார் இது’; தன்னைத் தானே விழுங்கும் பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR