Viral Video: இது என்ன மாயம்? இப்படிக்கூட நடக்குமா? “திடீரென தங்கமாக மாறிய ஆறு”

Viral Video In Tamil: உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு அதிசய நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. அந்த வகையில் ஒரு ஆறு தங்க நிறமாக மாறிய காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அது எங்கு நடந்தது? அதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்க்கலாம்?

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2023, 03:04 PM IST
  • நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு கடந்த 13 ஆம் தேதி அன்று ரஷ்யாவில் நடந்துள்ளது.
  • வீடியோவை பார்த்த பலர் "இது என்ன மாயம்? இப்படிக்கூட நடக்குமா?" என ஆச்சரியம்.
  • பல நெட்டிசன்கள் இதை "வானத்துக்கான நதி" என்று வர்ணித்துள்ளனர்.
Viral Video: இது என்ன மாயம்? இப்படிக்கூட நடக்குமா? “திடீரென தங்கமாக மாறிய ஆறு” title=

Trending News in Tamil: மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை அதிசயத்தைக் காட்டும் வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது.இயற்கையின் படைப்பில் எல்லாம் அழகே என்பது போல நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு நிகழ்வு ரஷ்யாவில் நடந்துள்ளது. அங்குள்ள காமா எனும் நதியில் முகில் நீர் தாரைகள் உருவாகியுள்ளன. அதாவது நீர் நிலைகளில் இருந்து மேகங்கள் தண்ணீரை உறிஞ்சும் போது இந்த நிகழ்வு அபூர்வமாக நடைபெறுமாம்.

இந்நிலையில் இதனை படம் எடுத்த படகில் பயணித்தவர்கள் சிலர் அதனை வெளியிட அது உலக அளவில் வைரலானது. காட்சிகள் உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன. பலரும் இந்த ரம்மிகமான காட்சியை பார்த்து ரசித்து வருகின்றனர். பொதுவாக இந்த முகில் நீர் தாரைகளை பொருத்தவரை சூழல் காற்றின் போது கடல் அல்லது ஆறு போன்ற நீர் நிலைகளில் இருந்து வானத்தை நோக்கி நோக்கி தண்ணீர் மேலே எழுந்து செல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துமாம். அந்த நிகழ்வுதான் ரஷ்யாவின் காமா ஆற்றில்  ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க - காகம் செய்த வேலை.. வெட்கி தலை குனிந்த மனிதர்கள்: பாடம் புகட்டும் வைரல் வீடியோ

@djuric_zlatko என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இது என்ன மாயம்? இப்படிக்கூட நடக்குமா? என ஆச்சரியத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த காணொளியை 130K பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 1200 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பல நெட்டிசன்கள் இதை "வானத்துக்கான நதி" என்று வர்ணித்து, அதன் அழகை பற்றியும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது பற்றி வானிலை ஆய்வாளர்கள் பேசும்போது கடலின் மேல் பரப்பில் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும் கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருக்கும் போது கடலில் நீர் தாரைகள் என்ற அதிசய நிகழ்வு ஏற்படும் என்றும் பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும். மீண்டும் இரண்டு காற்றுகளில் வெப்பநிலை சமமாகும் போது நீர் தாரைகள் மறைந்துவிடும் இந்த வினோத நிகழ்வின்போது கடல் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறும். இதன் வேகம் பல கிலோமீட்டருக்கு இருக்கலாம் என்று கூறி உள்ளனர். பெரும்பாலும் இந்த நிகழ்வை கடற்கரையோரம் வசிக்கும் மக்கள், கடலில் பயணம் செய்பவர்கள் ஆகியோர் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - டைம் டிராவல் செய்த பெண்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த வைரல் வீடியோ

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News