Viral Video: புலிக்கு தண்ணி காட்டிய கில்லாடி வாத்து!

Viral Video of Tiger Vs Duck: வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2023, 11:06 AM IST
  • தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
  • வைரலாகி வரும் வீடியோவில் தண்ணீரில் நீந்தி செல்லும் வாத்து ஒன்றை குறி வைத்து புலி மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணலாம்.
Viral Video: புலிக்கு தண்ணி காட்டிய கில்லாடி வாத்து! title=

வன வாழ்க்கை சுவாரஸ்யங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தது. வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சிறப்பாக் பொருந்தும் வாழ்க்கை வன் வாழ்க்கை. இங்கே இரைக்கான தேடல்களும், இரைக்க துடிக்கும் விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதும், காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களில், சில வீடியோக்கள், சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன,  சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. 

தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் தண்ணீரில் நீந்தி செல்லும் வாத்து ஒன்றை குறி வைத்து புலி மெல்ல மெல்ல நெருங்கி வருவதைக் காணலாம். அதனை இலகுவான இரையாக கருதி புலி வாத்து நெருங்குவதை காணலாம். ஆனால், அப்புறம் நடந்ததை பார்த்தால், உங்களுக்கு ஆச்சர்யம் மேலிடும்.

புலி எதையாவது இரையாக்க நினைத்தால், அதனை கொன்ற பிறகு தான் அமைதி அடையும். இந்த வீடியோவிலும் வாத்தை பார்த்ததும், புலி மிக ஆர்வமுடன் வாத்தை நோக்கி வருவதை நீங்கள் காணலாம். பிறகு வாய்ப்பு கிடைத்தவுடன் அதன் மீது பாயத் தயாராக இருக்கிறது. ஆனால், கில்லாடி புலி, அதற்கு தண்ணி காட்டி விட்டது. 

புலி - வாத்து வேட்டையை இங்கே கணலாம்: 

 

வீடியோவின் முடிவில், நிலைமை தலைகீழானது. ஆம், நாம் வாத்து புலிக்கு இரையாகி விடும் என எண்ணிய நிலையில்,  வாத்து அதனை ஏமாற்றி தண்ணி காட்டியடஹியும் புலி  ஏமாற்றம் அடைந்து வாத்தை தேடுவதையும் நீங்கள் காண்பீர்கள். எப்படியோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ​​வாத்து அந்த இடத்திலிருந்து சாதுரியமாக தப்பிச் செல்கிறது. வாத்து தண்ணீருக்குள் மூழ்கி, புலியின் பின் பக்கம் வழியாக தண்ணீரில் இருந்து வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த  வீடியோ  Buitengebieden @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த காட்சியை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். பதிவிட்ட ஒரு நாளிலேயே 9.5 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

புலிகள் தங்கள் இரையை மிகவும் துல்லியமாகவும் திருட்டுத்தனமாகவும் பதுங்கியிருந்து தாக்கும் திறனுக்காக அறியப்படுகின்றன. அவற்றின் சக்திவாய்ந்த தசைகள், கூர்மையான நகங்கள் மற்றும் கூரிய உணர்வுகளுடன், புலிகள் விலங்கு இராச்சியத்தில் வல்லமைமிக்க வேட்டையாடுபவை. காடுகளில், புலிகள் தங்கள் சுற்றுப்புறம் மற்றும் அவர்கள் சந்திக்கும் இரையின் வகையைப் பொறுத்து பல்வேறு வேட்டை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் அடர்ந்த தாவரங்களில் பொறுமையாக காத்திருக்கும் திறன் கொண்டவை., இரையை தாக்குவதற்கான சரியான தருணம் எழும் வரை பொறுமையாக தங்கள் சுற்றுப்புறங்களை அவதானிக்கும் திறன் பெற்றவை. புலிகள் தங்கள் இரையைக் கண்டறிந்தவுடன், வெறும் நொடிகளில் மணிக்கு 40 முதல் 60 மைல்கள் (மணிக்கு 65 முதல் 97 கிலோமீட்டர்கள்) வரை வேகத்தை எட்ட்டி தாக்கும் திறன் படைத்தவை.

இரையை தவிர்ப்பதில் வாத்துகளின் புத்திசாலித்தனத்தை வீடியோ வெளிப்படுத்தும் அதே வேளையில், விலங்கு இராச்சியத்தின் உண்மை நிலைமைகளையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. காட்டில் உயிர்வாழ்வதற்கு எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் சமயோஜித புத்தி ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது.

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News