Viral Video: ஏரிக்கரையில் ரொமான்ஸ் செய்யும் அன்னப்பறவைகள்... குதூகலத்தை தரும் வீடியோ.!

மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2023, 01:04 PM IST
  • வைரலாகும் அன்னபறவை காதல் வீடியோ.
  • மன மகிழ்ச்சியுடன் மூக்கை உரசிக் கொண்டு காதலில் லயித்திருக்கின்றன.
  • உடல் அசைவுகள் அழகிய நடனம் ஒன்றை நினைவூட்டுகிறது.

Trending Photos

Viral Video: ஏரிக்கரையில் ரொமான்ஸ் செய்யும் அன்னப்பறவைகள்... குதூகலத்தை தரும் வீடியோ.! title=

பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் பறவைகளின் காதலை விவரிக்கும் அழகான  வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோவில், அன்னப்பறவைகள் இரண்டு ஏரிக்ரையில் இருப்பதைக் காணலாம். அவை இரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, மன மகிழ்ச்சியுடன் மூக்கை உரசிக் கொண்டு காதலில் லயித்திருக்கின்றன. அவை செய்யும் உடல் அசைவுகள் அழகிய நடனம் ஒன்றை நினைவூட்டுகிறது. 

வைரலாகும் அன்னபறவை காதல் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

சாமீபத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வைரலாகியது. அது பறவைகள் இடையாயான காதல் அல்லது அன்பு ஆகியவற்றின் ஆழத்தை  உணர்த்தும் சோகமான சம்ப்வமாக இருந்தது. இந்திய வன சேவை அதிகாரி சுசந்த நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், பறவை ஒன்று இறந்த தனது துணையின் விட்டு விலக மறுப்பதைக் காட்டுகிறது. வீடியோ முற்றிலும் மனதை உருக்கும் வகையிலும், கண்ணீரை வரவழைக்கும் வகையிலும் உள்ளது.

பறவை தனது துணையின் மரணத்தை தாங்க முடியாமல் தவிப்பதை வீடியோ காட்டுகிறது. ஒரு மனிதன் இறந்த பறவையை நகர்த்த முயற்சிக்கும்போது, ​​மற்றொன்று அதை விடாமல் அதைப் பற்றிக் கொள்கிறது. அதன் அருகில் சென்று அதன் முகத்தை தனது முகத்தை வைத்திக் கொள்கிறது.  ​சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது, தனது துணையின் இறப்பை தாங்க முடியாமல் அதும் இறந்துவிட்டதை நீங்கள் காணலாம். யாரோ ஒருவர் அவற்றை ஒன்றாக புதைப்பதைக் காணலாம். மனதை உருக்கும் காதல் பறவை வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: காதலிக்காக உயிரை விட்ட பறவை.... கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!

இந்த வீடியோவைப் போல் மயிலின் காதல் உணர்வை விவரிக்கும் வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வைரலானது. மயிலின் வண்ணம், விசிறி போன்ற வால், நீண்ட வடிவான இறகுகள், இணையைக் கவர அவைகள் ஆடும் அற்புத நடனம் என பார்ப்பவர்களை எப்போதும் பிரம்மிக்க வைக்கும். பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: ஆண் மயிலின் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News