Watch: பாஜக-க்கு வாக்களிக்காதீர்! உறுதிமொழி எடுக்க சொன்ன ஆசிரியர்கள்!

மத்திய பிரதேச மாநில போபாலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

Last Updated : Jan 29, 2018, 11:48 AM IST
Watch: பாஜக-க்கு வாக்களிக்காதீர்! உறுதிமொழி எடுக்க சொன்ன ஆசிரியர்கள்! title=

மத்திய பிரதேச மாநில போபாலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது அந்த விழாவில் அப்பள்ளி ஆசிரியர்கள், வரும் மக்களவை மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று மாணவர்களை உறுதிமொழி எடுக்க சொன்ன வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

அம்மாநிலத்தின் பாஜக முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் கடந்த 12 ஆண்டுகளாக முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். மேலும் சமீபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending News