Viral Video: பளார்.. பளார்.. நீதிமன்ற அறையில் கணவனை தாக்கிய மனைவி

Viral News In Tamil: நீதிமன்றத்தில் அனைவரின் முன்பாக கணவனை பளார்.. பளார்.. என அறைந்த மனைவி. இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2024, 09:54 PM IST
Viral Video: பளார்.. பளார்.. நீதிமன்ற அறையில் கணவனை தாக்கிய மனைவி title=

Wife Husband Fight Video: இருவர் இடையே ஏற்படும் பரஸ்பர தகராறுகளைத் தீர்க்க நீதிமன்றத்தை அணுகுகிறோம். நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதி சரியான தீர்ப்பை வழங்குகிறார். ஆனால் இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தில் சண்டை போட்டு அடித்துக்கொண்டால் என்ன செய்வது? பிரச்சனைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? நீதிபதி எவ்வளவு சொல்லியும் கேட்காததால், இறுதியாக காவல்துறை அதிகாரியை அழைக்கும் நிலைக்கு பிரச்சனை சென்றுள்ளது. தற்போது அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் வைரலாகும் கணவன்-மனைவி சண்டை

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி இருதரப்பு வாதங்களை கேட்டக நீதிமன்ற அறைக்கு அழைக்கப்பட்டனர். அப்பொழுது தங்கள் தரப்பு வாதங்களை வைப்பதற்கு முன்பாகவே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். நீதிமன்றத்தில் இருவருக்கும் இடையே நடந்த இந்த சண்டை காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீதிமன்ற அறையில் சண்டை போட்ட கணவன் மனைவி

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த சில நொடி வீடியோவில், கணவன், மனைவி இருவரும் நீதிமன்ற அறையில் இருப்பதைப் பார்க்கலாம். விசாரணை தொடங்க உள்ள நிலையில், திடீரென அருகில் நின்ற கணவர் மீது கோபமடைந்த மனைவி கூச்சலிடுகிறார். கணவரின் காலரை இறுக்கி பிடித்து வெளியே இழுக்கும் மனைவிடம், நீ வெளியே போ எனக் கூறுகிறார். ஆனால் மனைவி கேட்பதாக இல்லை.

மேலும் படிக்க - ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ

கணவனின் கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்த மனைவி

கோபமடைந்து ஆத்தரத்தில் கணவரை கடுமையாக தாக்குகிறார். நீதிமன்ற அறையில் கணவனின் கன்னத்தில் பளார் பளார் என அறைகிறார். கோபமடைந்த கணவன், இந்த இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால், உனக்கு சரியான பாடம் புகட்டியிருப்பான் எனக் கோருகிறார். இரு தரப்பினரும் சண்டையிடுவதை பார்த்த வழக்கறிஞர், அவர்களை வெளியே செல்லுமாறு கூறுகிறார். கோர்ட்டில் சண்டை போட வேண்டாம், போலீசாரை கூப்பிடுங்கள் எனக் கூறுகிறார்.

நீதிமன்றத்தில் இப்படி எல்லாம் கூட சண்டை போடுவார்களா? என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ @gharkekalesh என்ற X தளத்தில் பகிரப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க - பெண்ணுக்கு வரதட்சணை எவ்வளவு கொடுக்கலாம்? அசர வைக்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News