தன் மகனை ஆசையாய் கொஞ்சும் புலி! வைரலாகும் வீடியோ!

புலி ஒன்று அதன் குட்டியை தாயுணர்வோடு கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரது இதயங்களையும் கவர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2022, 06:19 PM IST
  • மிருகங்களுக்கும் தாய்ப்பாசம் உள்ளது என்பதை உணர்த்தும் வீடியோ.
  • தன் குட்டியை கொஞ்சி விளையாடும் புலி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
தன் மகனை ஆசையாய் கொஞ்சும் புலி! வைரலாகும் வீடியோ! title=

தாய்ப்பாசம் என்பது உயரிய ஒன்று, மனிதர்களிடம் மட்டும் தான் இந்த பாசப்பிணைப்பு இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.  இந்த உலகில் உயிரினங்களாக பிறந்த ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் தாய்ப்பாசம் உள்ளது.  இதில் காடுகளில் வாழ்ந்து வேட்டையாடும் கொடிய மிருகங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா, அந்த கொடூரமான மிருகங்களின் இதயத்திலும் ஈரம் உள்ளது.  அப்படியான ஒரு அற்புதமான நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தாய் புலி ஒன்று அதன் குட்டிபுலியுடன் கொஞ்சி விளையாடும் காட்சி தான் பலரது நெஞ்சங்களையும் நெகிழ செய்துள்ளது.

tiger

மேலும் படிக்க | நட்பே துணை... வைரலாகும் நாய் - பூனை வீடியோ

சமூக வலைத்தளமான ட்விட்டரில் வைல்ட் அனிமல்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது இந்த அற்புதமான காட்சி.  அந்த அழகான வீடியோவில், பெரிய பாறை அருகில் காய்ந்த புற்கள் சில கிடக்கிறது.  அதன் மீது பெரிய புலி ஒன்று படுத்து இருக்கிறது, அந்த புலிக்கு இடையில் குட்டிப்புலி ஒன்றும் படுத்து இருக்கிறது.  மனித இனத்தில் ஒரு தாய் எப்படி தன் குழந்தையை கொஞ்சுவார்களோ அப்படி தனது கை பகுதியில் அந்த குட்டிபுலியை வைத்துக்கொண்டு தாய்புலி கொஞ்சுகிறது.  குழந்தைகள் சேட்டை செய்வது போல அந்த புலிக்குட்டியும் துள்ளி குதித்து சேட்டை செய்கிறது.

 

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது, பல இணையவாசிகளின் நெஞ்சங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.  இதுவரை இந்த வீடியோவை முப்பத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல சிறப்பான கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | பூனைகளின் சண்டையை தடுத்து நிறுத்திய நாய்...வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News