கட்டுப்பட்டு இருந்தாலும் நான் புலிடா! சீண்டினால் சின்னாபின்னமாக்கிடுவேன்! உறுமும் செல்லப் புலி

Animal Video: கயிற்றில் கட்டுண்டு கிடப்பதால், என்னை குறைவாக மதிப்பிட்டாயோ? என்று நாய்க்குட்டியை தாக்கும் புலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2022, 01:49 PM IST
  • வீட்டிற்குள் கட்டிப் போடப்பட்ட புலிக்குட்டி
  • புலிக்குட்டியை பூனைக்குட்டியாய் நினைத்த நாய் படும் பாடு! வீடியோ வைரல்
  • விலங்குகளின் இயல்பான குணம் ஒருபோதும் மாறுவதில்லை
கட்டுப்பட்டு இருந்தாலும் நான் புலிடா! சீண்டினால் சின்னாபின்னமாக்கிடுவேன்! உறுமும் செல்லப் புலி title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையில் பல வசதிகளை சுலபமாக்கியிருக்கிறது, அதிலும் இணையத்தில் நாம் பார்க்கும் பல வித வீடியோக்களில் சில பரவசப்படுத்தினால், சில பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்படுகின்றன. விலங்குகளின் வீடியோக்கள் அனைவருக்கும் பிடித்தமானவையாக இருக்கின்றன. வித்தியாசமான வீடியோக்களை பார்த்து பரவசப்படுவதற்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் அச்சப்படுத்தும் விலங்குகளின் அரிய வீடியோக்களை பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள், அவற்றை தொடர்ந்து பகிர்ந்து வைரல் ஆக்குகின்றனர்.

இயல்பான வாழ்க்கையில் நாம் காண முடியாத பலவற்றை காட்டும் வீடியோக்கள் என்பதால் மிருகங்களின் காதல், மோதல், ஊடல், சீண்டல், கோபம் என பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் அனைவருக்கும் பிடித்திருக்கின்ரன. அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். 

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

அப்படி இணையத்தில் வைரலாகும் விலங்களின் வீடியோ ஒன்று ஆச்சரியப்பட வைப்பதோடு, பல கேள்விகளையும் எழுப்புகிறது. காட்டு விலங்குக்கு வீட்டில் என்ன வேலை? அதிலும் புலியை வீட்டில் வைத்து பராமரிப்பார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன. அதிலும், கட்டிப்போடப்பட்ட புலிக்கு பக்கத்தில் நாய் ஒன்று சென்று போக்கு காட்டுவதும் அதிர்ச்சியானதாகவும், இதுவரை பார்த்திராத நிகழ்வாகவும் இருக்கிறது. 

இந்த வீடியோவை நீங்களே பார்த்து, இது அதிசயமா? இல்லை ஆச்சரியமா என்று சொல்லுங்கள்... வைரலாகும் வீடியோ...

மரம் ஒன்றில் கட்டப்பட்டிருக்கும் புலியின் வீடியோ பல கேள்விகளையும் குழப்பங்களையும் எழுப்புகிறதா? ஆனால், புலியையே சீண்டும் நாயின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க  முடியாது அல்லவா? ஆனால், ஓவரா வாலாட்டினா, ஒட்ட நறுக்கிடுவேன் என்று சொல்வது போல இருக்கும் புலியின் ரியாக்சன், ஆச்சரியம் அளிக்கிறது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சிங்கிளாக இருந்தாலும், கயிற்றில் கட்டிப்போட்டு என்னை செல்லப் பிராணியாக மாற்றினாலும் என்னுடைய வலிமை புரியாம விளையாடுறியா? என்று புலி கேட்பதைப் போல் தோன்றுகிறது. விலங்குகளின் உலகம் விசித்திரமானது. தனது பலம் தெரியாத நிலையில் அடைபட்டிருக்கும் புலியை சீண்டிப் பார்க்கிறது நாய்க்குட்டி. இது, நமக்கான வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கலாம் அல்லவா?

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பலரும் அதிகமாக பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கட்டிப்போட்டாலும் புலி, புலி தான் என்பதை உணர்த்தும் வீடியோ இது. விலங்குகளின் தாக்குதல் எப்போது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், நாய்க்குட்டியின் அசட்டு தைரியத்தை என்ன சொல்வது? 

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News