தண்ணீர் குடிப்பதிலும் தனி ஸ்டைல் காட்டும் யானைக்குட்டி! வைரல் வீடியோ!

யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை கவர்ந்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Apr 15, 2022, 04:51 PM IST
  • ஸ்டைலாக தண்ணீர் குடிக்கும் யானை.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
தண்ணீர் குடிப்பதிலும் தனி ஸ்டைல் காட்டும் யானைக்குட்டி! வைரல் வீடியோ! title=

அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருகிறது, விலங்குகளின் வீடியோக்கள் தான் வெகு விரைவில் கவன ஈர்ப்பை பெற்று விடுகிறது.  அந்த வகையில் தற்போது யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பலரது மனங்களையும் கொள்ளை கொடுள்ளது.  கோடைக்காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் தொண்டை வறண்டு தவிக்கும் நிலையில், தாகத்தை தணிக்க தண்ணீரை குடிக்கும் அந்த யானை தனி ஸ்டைலுடன் குடிக்கிறது.   

மேலும் படிக்க | சிங்கத்தை துரத்தி துரத்தி படுத்தும் ஆமை, சைலண்டா சிங்கம் நிற்க காரணம் என்ன: வைரல் வீடியோ

தற்போதுள்ள வைரல் வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், டாக்டர்.சாம்ராத் கவுடா ஐஎஃப்எஸ் என்பவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் யானைகுட்டி ஒன்று கருப்பு நிற பக்கெட் அருகேயும், பெரிய யானை ஒன்று சிறிது தூரத்திலும் நிற்கிறது.  அந்த பக்கெட்டில் டியூப் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கிறது, அதிலுள்ள தண்ணீரை தாகத்தில் இருக்கும் யானைக்குட்டி ஒன்று வந்து குடிக்கிறது, அது மற்ற யானைகளை போல் நீரை அருந்தாமல் தும்பிக்கையை ஒருவிதமாக நீட்டி மடக்கி ஸ்டைலாக நீரை வருந்துகிறது.

 

இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவிட, இது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸுகளை குவித்துள்ளது.  அதோடு பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவிற்கு 'ட்ரிங்கிங் வாட்டர் வித் ஸ்டைல்' என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது, யானை தண்ணீரை அருந்தும் காட்சியை பார்த்து பலரும் ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: இது தான் கடல் அரக்கனா... ஆற்றில் உலாவும் ராட்சஸ மீன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News