உயிருக்கான போராட்டங்கள் அடங்கியது தான் உயிரினங்களின் வாழ்க்கை. வல்லவன் வாழ்வான் என்ற விதி வன விலங்குகள் பறவைகள் வாழ்க்கையில் நன்றாக பொருந்தக் கூடியது. வலிமை கொண்ட உயிரினங்கள், பலவீனமான உயிரினங்களை தின்று வாழ்கின்றன. வலிமை என்பது உடல் மற்றும் மன வலிமையை குறிக்கிறது. பல சமயங்களில், உடல் வலிமை கோட உயிரினங்கள், பலவீனமான விலங்குகளை நொடியின் கொன்று இரையாக்கி விடும். அதே சமயத்தில், அரிதான சம்பவங்களில், பலவீனமான விலங்குகள் தனது மன வலிமையினால், சாதுர்யமாக தப்பிக்கும் சம்பவங்களும் உண்டு. இரு வலிமையான விலங்குகள் போரிடும் போது கேட்கவே, வேண்டாம். ஆக்கிரோஷமான அந்த சண்டையில் யார் வெல்ல போகிறார்கள் என்று பார்ப்பதே திகிலான காட்சியாக இருக்கும்.
வன வாழ்க்கை நமக்கு புரியாத பல புதிர்களைக் கொண்டுள்ளன. விலங்குகளின் உலகம் ஆச்சரியங்களை அள்ளித் தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை, காட்சிகளை இங்கே காணலாம். அதனை நமக்கு எடுத்துக் காட்டும் வகையில் சமூக ஊடகத்தில் விலங்குகள், குறிப்பாக பறவைகள் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் பல பகிரப்படுகின்றன. அரிதான சில காட்சிகள் மிகவும் வைரலாகும். அந்த வகையில் கழுகு வீடியோ ஒன்று வைரலாகி (Viral Video) வருகிறது.
வைரலாகி வரும் அந்த காணொளியில், கழுகு ஒன்று, தண்ணீரிருக்குள் சீறிப்பாய்ந்து, மிக நேர்த்தியாக வேட்டையாடுகிறது. நொடியில் மீனை பிடித்து, தனது அலகுகளால் வலுவாக கொத்தி பிடித்துக் கொள்கிறது. நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, மிக லாவகமாக, அதனை கீழே விழாமல், ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். மீனை பிடித்துக் கொண்டு வானத்தில் பறக்கும் அந்த கழுகு , சிறிதும் தாமதிக்காமல் அதனை பறந்து கொண்டே நடு வானில் சாப்பிட தொடங்கும் காட்சி நிச்சயம் உங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்
வைரலாகும் கழுகின் மீன் வேட்டை வீடியோவை கீழே காணலாம்:
Have you ever seen an eagle catch a fish and then swallow it in mid air ?
— Raghu (@IndiaTales7) September 30, 2024
கழுகு தண்ணீருக்குள் பாய்ந்து மீனை குறி பார்த்து வேட்டையாடும் திறனையும், பிடித்த மீனை நடுவானிலே ருசி பார்த்த திறனையும் இணையவாசிகள் பெரிதும் வியந்து பாராட்டி வருகின்றனர். இதனை ஏராளமோர் பகிர்ந்து கொண்டதுடன், பலவேறு வகையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | இது பாயும் புலி அல்ல... பயந்தோடும் புலி... இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்திய வீடியோ...
கழுகுகள் மிக நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டவை. இவை எந்த விலங்குகளையும் வேட்டையாடி இரையாக்கும் தன்மை கொண்டவை. கழுகுகள் அவற்றை விட இரு மடங்கு பெரிய விலங்குகளையும் தாக்கி கொல்லும் திறன் பெற்றது. கூர்மையான கண்களுடன், மனிதனை விட 10 மடங்கு வலிமை கொண்டது. இதன் கண்பார்வை மிகவும் கூர்மையானது. மிக தொலைவில் உள்ள இரையையும் கழுகால் அடையாளம் காண முடியும். உலகில் சுமால் 60 வகையான கழுகு இனங்கள் உள்ளன. கழுகின் பார்வை மனிதனை விட நான்கைந்து மடங்கு சிறந்தது. இதனால் புற ஊதா கதிர்களையும் கூட காண முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். அதனால் தான் நிலத்தில் உள்ள விலங்குகள் மட்டுமல்ல, நீரில் இருக்கும் விலங்குகளையும் திறமையாக வேட்டையாடுகிறது கழுகு.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ