viral Video: அஞ்சி நின்ற மான் குட்டி; ஏதும் செய்யாமல் சென்ற புலி

வனப்பகுதியில் எதிரே அஞ்சி நின்ற மான்குட்டியை புலி ஏதும் செய்யாமல் ஒதுங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 03:08 PM IST
viral Video: அஞ்சி நின்ற மான் குட்டி; ஏதும் செய்யாமல் சென்ற புலி title=

புலி வேட்டை விலங்குகளில் கொடூரமான விலங்கு. அதற்கு பசி எடுத்துவிட்டால், கண்ணில் படும் எந்த விலங்கையும் விட்டுவைக்காது. எவ்வளவு வேகத்தில் அந்த இரை ஓடினாலும், அதைவிட இரு மடங்கு வேகத்தில் துரத்திச் சென்று தாக்கி சாப்பிட்டுவிடும். ஏனென்றால், புலியின் வேகத்துக்கு இணையாக யாராலும் ஓட முடியாது. ஓட்டத்தில் மட்டுமல்ல மரம் ஏறுவதில் புலிக்கு நிகர் புலியே தான். புலியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அது மிக மிக தவறான முடிவு.

மேலும் படிக்க | குழந்தையை சுற்றி வளைத்த மலைப்பாம்பு, அங்கதான் ஒரு ட்விஸ்ட்: திகிலூட்டும் வைரல் வீடியோ

புலிக்கு நீச்சல் மற்றும் மரம் எல்லாம் சர்வ சாதாரணம். அதனால், இரையை இரையாக்குவதில் கில்லாடியான புலிக்கு சில நேரங்களில் மனிதாபிமானமும் வெளிப்படும். இணையத்தில் இருக்கும் ஒரு சில வீடியோக்களைக் கூட நீங்கள் பார்க்கலாம். குட்டி மான் உள்ளிட்ட விலங்குகள் இருந்தால் அவற்றை புலி வேட்டையாடாமல் விட்டுச் செல்லும். தாய் மானை வேட்டையாட செல்லும்போது, அங்கு குட்டி மான் இருந்து தாய் மான் தப்பித்துவிட்டால், அந்த குட்டி மானை புலி வேட்டையாடாது. இது தொடர்பான வீடியோ ஒன்று யூடியூபில் கூட இருக்கிறது. ஓரளவுக்கு பெரிய மானாக இருந்தால் மட்டுமே புலி வேட்டையை தொடரும்.

இதுபோன்ற வீடியோ இப்போது இணையத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அதாவது புலி இருப்பதை அறியாமல் ஒரு மான் குட்டி வந்துவிடுகிறது. புலியும் அதனை பார்க்க, மான் குட்டியும் என்ன செய்வது என தெரியாமல் அஞ்சி நிற்கிறது. இன்றுடன் நம் வாழ்க்கை அவ்வளவு தான் என மான் குட்டி நினைத்துக் கொண்டிருக்கையில், அதனை ஏதும் செய்யாமல் கடந்து செல்கிறது புலி. அதற்கு அப்போது இரை தேவைப் படவில்லைபோலும். அதனால் மறுவாழ்வு பெற்றுவிடுகிறது அந்த மான். இந்த வீடியோ இப்போது யூ டியூப் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் இப்படியா..வைரலாகும் மாணவ - மாணவியின் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News