ஜூலை 6ஆம் தேதி உலக முத்த தினமாக கொண்டாடப்பட்டது. இணையர்கள் பலர் முத்தம் பகிர்ந்து கொள்ளும் போட்டோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். இன்னும் பல முரட்டு சிங்கிள்கள் மற்றவர்கள் கொடுத்துக் கொள்ளும் முத்தத்தை பகிர்ந்து குதூகலம் அடைந்தனர். இந்நிலையில் இணையர்கள் முத்தம் கொடுத்துக் கொள்ளும்போது தசைகள் எவ்வாறு இயங்குகிறது, இருதயம் எப்படி இயங்குகிறது என்பனவற்றை MRI Scan மூலம் மருத்துவர் ஒருவர் விளக்கியிருக்கிறார்.
This is how it looks on Magnetic resonance imaging when you kiss! pic.twitter.com/OhsmuDALIn
— Doctor Thalamus (@Neurochauhan) July 6, 2022
டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ள விடியோதான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. உதடு, மற்றும் நாக்கின் தசை அசைவுகள் அந்த ஸ்கானில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் இருதயத் துடிப்பின் வேகம் சில வினாடிகளில் உயருவதை பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். பெண்ணின் இருதய துடிப்பு வேகம் பலமாக இருப்பதால் அவர் முத்தத்திற்கு புதிது என ஒருவர் குறும்பாக பதிவிட்டிருக்கிறார்.
Two separate coils in one scanner. pic.twitter.com/OCePkjW47Z
— Doctor Thalamus (@Neurochauhan) July 6, 2022
மேலும் படிக்க | Love You Maa: அம்மாவுக்கு பிறந்த நாள்! மகன் செய்த காரியத்தை பாருங்கள்
மேலும் ஒருவர் எப்படி இதனை எம்.ஆர்.ஐ ஸ்கான் செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு இணையர்கள் ஸ்கான் டேபிளில் படுத்திருக்கும் படத்தையும் டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். கேலி கிண்டல்களை ஓரம் ஒதுக்கிவிட்டு பார்த்தால் ஒரு முத்தம் மனித இதயத்தை எவ்வளவு வேகம் கொள்ளச் செய்கிறது என இணைய உலகம் ஆச்சரியமாக பார்க்கிறது.
மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR