Groom Kicked Bride: நடனத்தின் போது மணமகனை உதைத்த மணமகன்: மணமகனுக்கும், மணமகனுக்கும் மிகவும் சிறப்பாக அமைந்த திருமண நாள். திருமணம் நிகழ்ச்சிக்கு வரும் அனைவரின் கவனமும் பார்வையும் புதுமணத் தம்பதிகள் மீது தான் இருக்கும். திருமண நிகழ்ச்சி என்றாலே, விதவிதமான உணவு, ஆடல், பாடல், மேளம் என கலை கட்டும். அதுவும் திருமணத்தின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சின்னதா ஒரு டான்ஸ் அல்லது செம குத்து ஸ்டைலில் டான்ஸ் ஆடுவது வழக்கம். பல திருமண நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டான்ஸ் ஆடுவதை விட, மணமகன் மற்றும் மணமகளின் நடனம் மிகவும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். அதேபோல் தான் தற்போது வைரலாகி (Viral Video) வரும் அந்த வீடியோவில் திருமணத்தின் போது மணமக்கள் ஆடிய ஒரே நடனம், அனைவரின் முகத்தில் சிரிப்பலையை வரவழைத்துள்ளது.
திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகளின் நடன நிகழ்ச்சிகளை நீங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஜோடி நடனமாடிய விதம் வித்தியாசமானது. நீங்கள் வைரலாகி வரும் வீடியோவை பார்த்தீர்கள் என்றால், மணமகன் மணப்பெண்ணை விட பாடலின் இசைக்கு ஏற்ப துடிப்புடன் ஆடுகிறார். இது திருமணம் நிகழ்ச்சி என்று கூட எந்த கவலையும் இல்லாமல், ஜாலியாக ஆடுகிறார். அவருடன் மணமகளும் இருக்கிறார். மாப்பளையின் நடந்ததை ரசித்தவாறு மணப்பெண் இருக்கையில் சிரித்துக்கொண்டே அமர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க: ஊஞ்சலாடப் போய் மல்லாக்கா விழுந்த பெண்கள்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ
புது மாப்பளையின் நடனம் கொஞ்சம் கொஞ்சம் வேகமெடுக்கிறது. மணமகன் தன் கால்களை மணப்பெண்ணின் தலைக்கு மேல் தூக்கி ஆட விரும்பி, முயற்சிக்கிறார். ஆனால் மணமகனின் கால் நேரடியாக மணப்பெண்ணின் தலையில் படுகிறது. ஆனாலும் அதையும் ரசித்தவாறே மணப்பெண் இருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களாலும் சிரிப்பை நிறுத்த முடியாது.
Le falta un poco de agilidad pic.twitter.com/TREJBWvwsk
Los Negros Del Ataúd (@NegrosConAtaud) June 11, 2022
இந்த வேடிக்கையான வீடியோவை ட்விட்டரில் @NegrosConAtaud என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜூன் 11 ஆம் தேதி ஷேர் செய்யப்பட்ட வீடியோவை 3 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம் -Viral News
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR