பீகாரை சேர்ந்தவர் வினோத் குமார். பொறியாளரான இவர் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பாட்னா சென்றுள்ளார். அங்கு இவரை கடத்திய ஒரு கும்பல் கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில் மணக்கோலத்தில் இருக்கும் வினோத் குமார் தன்னை விட்டு விடுமாறு அழுது கெஞ்சுகிறார். அப்போது அங்கிருந்த பெண்கள், அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். மேலும் நாங்கள் உன்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை. திருமணம் தான் செய்து வைக்கிறோம் என கூறுகின்றனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு சென்ற வினோத் குமார் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் வினோத் குமாருக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரின் உதவியுடன் வினோத் குமார் அந்த கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பின்னர் வினோத் குமாரின் குடும்பத்தினர்கள் அந்த கும்பலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் அந்த பெண்ணை ஏற்க அவர்கள் கட்டாய படுத்தப்படுவதாகவும் காவல்துறையினரிடன் தெரிவித்துள்ளனர்.