ஜூலை 27 அன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் ஜுங்கா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஜுங்கா. இத்திரைப்படமானது வரும் ஜூலை 27-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Last Updated : Jul 18, 2018, 01:12 PM IST
ஜூலை 27 அன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் ஜுங்கா! title=

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிய வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஜுங்கா. இத்திரைப்படமானது வரும் ஜூலை 27-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தினை அடுத்து விஜய் சேதுபதி - கோகுல் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ஜுங்கா. வனமகன் திரைப்பட நாயகி சாயிஷா மற்றும் மடோனா செபாஸ்டீன் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி நடித்தப் படங்களில் இதுதான் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாகும். இதன்காரணமாக விஜய் சேதுபதியே இப்படத்தினை தயாரிக்கின்றார். நடிகர் அருண் பாண்டியன் இப்படத்தின் வெளியீட்டு உரிமையினை பெற்றுள்ளார்.

பாரிஸில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸிலேயே படமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இத்திரைப்படம் வரும் ஜூலை 27-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News