அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் ஆரம்பமாகிறது.
விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விளையாட்டு மையப்படுத்தி அட்லி எடுக்கவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பரியேறும் பெருமாள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை மறுநாள் ஜனவரி 21-ம் தேதி முதல் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.