சறுக்கி விளையாடும் ஜாலியெல்லாம் உங்களுக்கு தெரியாது? பாண்டா அடிக்கும் குட்டிக்கரணம்

Panda Bear Viral Video: பல வித விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும் மகிழவும் உதவும் இணைய உலகம், நம்மால் கற்பனையும் செய்து பார்த்திட முடியாத அனுபவங்களை வழங்குகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 3, 2023, 02:54 PM IST
  • என்கூட போட்டி போட முடியுமா?
  • ஜாலியாக குட்டிக்கரணம் அடிக்கும் பாண்டா
  • வாழ்க்கையை என்ஞாய் பண்ணும் கரடிக்குட்டி
சறுக்கி விளையாடும் ஜாலியெல்லாம் உங்களுக்கு தெரியாது? பாண்டா அடிக்கும் குட்டிக்கரணம் title=

வைரல் வீடியோ: பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது இயற்கை என்று சொன்னால், செயற்கையாக, அதாவது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இணைய உலகம் வேறு விதத்தில் வித்தியாசமான உலகமாக பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளது. பல வித விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவும் மகிழவும் உதவும் இணைய உலகம், நம்மால் கற்பனையும் செய்து பார்த்திட முடியாத அனுபவங்களை வழங்குகிறது.

எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் என்பதை இணைய உலகமும் எதிரொலிக்கிறது. இங்கு கொட்டிக் கிடக்கும் பல்வேறு செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இ ணைய உலகம் உள்ளது. 

இணையத்தில் வெளியாகும் வீடியோக்களுக்கு இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: வகுப்பறையில் இப்படியா..வைரலாகும் மாணவ - மாணவியின் வீடியோ

அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை தளர்த்திக்கொள்ள வீடியோக்கள் உதவுகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

காட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகின்றன. இவற்றில் விலங்குகளின் பல வித்தியாசமான குணங்களையும், செயல்பாடுகளையும் நாம் காண்கிறோம். அவற்றில் சில எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாமல் மகிழ்ச்சி அளிக்கின்றன. 

தற்போது பாண்டா கரடியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அது ஜாலியாக விளையாடுவது பார்ப்பவரின் மனதை மயக்குகிறது. அந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

தன் மிக வித்தியாசமான பாணியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சிரிக்க வைக்கும் இந்த கரசியின் குட்டிக்கரணம் எப்படி இருக்கிறது?   

வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் இந்த பாண்டா, ஜாலியாக விளையாடும் வீடியோ அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.  

குட்டிக்கரணம் அடிக்கும் கரடி

மேலுப் படிக்க | வைரல் வீடியோ: கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு...உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சிய நபர் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், பனிமலையில் தனிமையை அனுபவிக்கும் பாண்டா, ஜாலியாக குட்டிக்கரணம் அடிக்கிறது. உண்மையில் இந்த பனிமலையில் நாம் நின்றால் மூச்சு விடவே சிரமப்படுவோம். வனவிலங்கு தினமான இன்று, வனவிலங்குகளின் இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.

கரடியின் வித்தியாசமான வீடியோ

கரடியின் இந்த குறும்பு விளையாட்டு வீடியோவை எண்ணிலடங்காத முறை பார்த்து மகிழும் மக்கள், லைக்குகளால் பாண்டாவை பாராட்டி வருகின்றனர்.   

மேலும் படிக்க | ‘அப்படியே ஷாக் ஆய்ட்டேன்’: தாக்க வந்து, பல்பு வாங்கி ஓடியே போன கரடி, வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News