சிவகார்த்திகேயன் புதிய படத்தில் இணைந்த டாப் லிஸ்ட் பிரபலம்! வீடியோ!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் இணைந்துள்ளார்!

Last Updated : Jun 28, 2018, 02:46 PM IST
சிவகார்த்திகேயன் புதிய படத்தில் இணைந்த டாப் லிஸ்ட் பிரபலம்! வீடியோ! title=

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி இன்று தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய்க்கு பிறகு அதிக குடும்ப ரசிகர்களை கொண்டு முன்னணி ஹீரோவாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். இவர், படங்கள் என்றாலே விரும்பி போகும் நிலைக்கு அவர் வளர்ந்துவிட்டார்.

மக்கள் மத்தியில் தொடர் ஆதரவை கொண்ட இவர், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் இடம் பெரும் "கல்யாண வயசு" எனும் பாடலினை எழுதியுள்ளார். அந்த பாடலானது இணணயத்தில் அதிகம் பேசப்பட்டது. இதையடுத்து, இவர் அண்மையில் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  

இந்நிலையில், இவர் தற்போது இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமாறுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கி புகை படங்கள் வெளியாகின. 

இந்நிலையில், தற்போது இந்தியளவில் டாப் லிஸ்டில் இருக்கும் சிறந்த நடன அமைப்பாரை இப்படத்தில் நடனம் அமைக்க Paresh shirodkar (பரேஷ் சிரோட்கர்) ஐ ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அதன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News