வெளியானது டபுள் தலயின் `விஸ்வாசம்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்....!

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான `விஸ்வாசம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Last Updated : Aug 23, 2018, 09:24 AM IST
வெளியானது டபுள் தலயின் `விஸ்வாசம்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்....! title=

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவான `விஸ்வாசம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அஜித், சிவா கூட்டணியில் உருவாகிவரும் `விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தமிழ் மற்றும் ஆங்கிலத் தலைப்புகளுடன் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். அஜித் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று அதிகாலை 3.40 மணிக்கு விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தமிழ் மற்றும் ஆங்கிலத் தலைப்புகளுடன் வெளியானது. இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் போஸ்டர்களை வெளியிட்டது.

ட்விட்டரில் போஸ்டர் வெளியானதும் அஜித் ரசிகர்கள், போஸ்டர்களை சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிட்டு வருகிறார்கள். போஸ்டர் வெளியான சிறிது நேரத்தில், `ViswasamFirstLook' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகிவிட்டது. இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் இமான் இந்தப் படத்தின் மூலம், முதல் முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அஜித், நயன்தாராவுடன் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பல நடித்து வருகிறார்கள். போஸ்டரில் `பொங்கல் 2019’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News