காலா படத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தமிழ் ராக்கர்ஸ்!

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தை ரிலீசாகும் அன்றே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.

Last Updated : May 29, 2018, 01:36 PM IST
காலா படத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த தமிழ் ராக்கர்ஸ்! title=

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தை ரிலீசாகும் அன்றே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 

முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, நேற்று "காலா" படத்தின் புதிய டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் பைரசி இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் தற்போது ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அது என்னவென்றால்

ரஜினி நடித்துள்ளார் காலா படம் ரிலீசாகும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகும் என அறிவித்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். 

Trending News