கண்ணை கசக்கும் யானை... இப்படி செய்யக்கூடாது செல்லக்குட்டி - க்யூட் வீடியோ!

யானைகள் கம்பீரமான விலங்குகள், அவை மக்களைக் கவர்வதில் என்றுமே தவறில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் யானைகளின் வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை மகிழ்விக்கின்றன. குட்டி யானைகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவது முதல் தாய் யானைகள் தங்கள் குழந்தைகளுக்கு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் வரை, யானைகளின் வெவ்வேறு வீடியோக்கள் இணையத்தை ஆள்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 23, 2023, 06:33 PM IST
  • இந்த வீடியோ Reddit சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
  • நூற்றுக்கணக்கானோர் இதில் கமெண்ட் செய்து வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
கண்ணை கசக்கும் யானை... இப்படி செய்யக்கூடாது செல்லக்குட்டி - க்யூட் வீடியோ! title=

Elephant Viral Video: யானைகள் கம்பீரமான விலங்குகள், அவை மக்களைக் கவர்வதில் என்றுமே தவறில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் யானைகளின் வீடியோக்கள் பெரும்பாலும் மக்களை மகிழ்விக்கின்றன. குட்டி யானைகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவது முதல் தாய் யானைகள் தங்கள் குழந்தைகளுக்கு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் வரை, யானைகளின் வெவ்வேறு வீடியோக்கள் இணையத்தை ஆள்கின்றன. 

அந்த வகையில், மனிதர்கள் தூசி விழுந்தாலோ இல்லை அழுதாலோ கண்ணை கசக்குவதை போன்று யானைகளும் செய்யும் என சொன்னால் நம்ப முடியாது அல்லவா. ஆனால், ஒரு யானை தனது கண்களை எவ்வாறு தேய்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. இது Reddit சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோவாகும். 

வைரல் வீடியோ:

How an elephant rubs its eye
by u/amish_novelty in interestingasfuck

மேலும் படிக்க | டான்ஸ் சொல்லிக்கொடுத்த பெண், அப்படியே ஆடிய யானை: செம கியூட் வைரல் வீடியோ

"யானை எப்படி தன் கண்ணைத் கசக்குகிறது" என்று கேப்ஷனோடு அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. யானை தனது தும்பிக்கையைப் பயன்படுத்தி கண்ணைத் தேய்ப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ ஏழு நாட்களுக்கு முன்பு (ஏப். 16) பகிரப்பட்டது. பதிவிடப்பட்ட இந்த வீடியோ 48,000 ஆதரவு வாக்குகளைக் குவித்துள்ளது. இதில் பலரும் தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். வீடியோவில் அந்த யானையின் கியூட் செயலையும், அதன் அழகையும் குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை குவித்து வருகின்றனர். 

அதில், Reddit பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்: "இது நான் பார்த்த மிக அழகான வினோதமான விஷயம்" என பதிவிட்டுள்ளார். "அதன் பாதத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதை விட, இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று மற்றொருவர் பகிர்ந்துள்ளார். "இதைவிட வேறு எது இவ்வளவு அழகாக இருக்கும்" என தெரியவில்லை என ஒருவர் பயனர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? குட்டியை தாக்கிய முதலையை துவம்சம் செய்த தாய் யானை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News