சன்னி லியோனை இப்படி பார்ததுண்டா! வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Sep 15, 2018, 03:26 PM IST
சன்னி லியோனை இப்படி பார்ததுண்டா! வைரலாகும் புகைப்படம்! title=

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

சன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இந்த புகைப்படத்தில் அவர் தனது கனவர் மற்றும் மகளுடன் பாரம்பரிய உடையில் இருக்கின்றார். 

இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின் மற்றம் அவரது கணவர் டேனியல் வெபர் திருமணம் செய்துக்கொண்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் இத்தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. 

குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும் தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.

அந்த வகையில் தற்போது இவர் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளதை புகைப்படமாக எடுத்து ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் தனது மகள் நிஷா தனக்கும் தன் கனவர் டேனியல் வெபருக்கும் நெற்றியில் திலகம் இடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டள்ளது, இந்நிகழ்வ் தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Trending News