கவிஞரான பைலட்! விமானத்தை ஓட்டி மொழி வானில் சிறகடிக்கும் கவிஞர்

Google Trending Pilot Video: என்னவொரு மொழி ஆளுமை? விமான ஓட்டியின் தாய்மொழிப்பற்று எப்படியிருக்கும் என்பதைக் காட்டும் சூப்பர் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 1, 2023, 03:18 PM IST
  • தாய்மொழியில் கலக்கும் விமானஓட்டியின் வைரல் வீடியோ
  • இப்படியொரு மொழி ஆர்வமா?
  • ஸ்பைஸ்ஜெட் விமானியின் அழகிய மொழி வீடியோ
கவிஞரான பைலட்! விமானத்தை ஓட்டி மொழி வானில் சிறகடிக்கும் கவிஞர் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.

இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும், விமானப் பயணம், விண்வெளிக்கான பயணம் போன்றவை குறைவாகவே பகிரப்படுவதால், அவை இணையதளங்களில் வெளியான உடனே வைரலாகின்றன.

அந்த வகையில் தற்போது விமானத்தை இயக்கும் பைலட் ஒருவரின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வழக்கமான வேலையாய் செய்யாமல், அனுபவித்து வேலை செய்வது எப்படி என்பதை இந்த பைலட்டிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | படையப்பா ரஜினி ஸ்டைலில் 15 அடி நீள பாம்பை கையில் பிடித்த நபர்: வீடியோ வைரல் 

இணையத்தில் வெளியாகி சக்கைப்போடு போடும் இந்த வீடியோ, பார்ப்பவர்களை ரசிக்க செய்வதற்குக் காரணம், மிகவும் பரபரப்பும் அழுத்தமும் கொண்ட வேலைக்கு நடுவில், விவேகத்துடன் வேலை பார்க்கும் பைலட் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறார்.

அதிலும், அவர் மொழியின் மீது கொண்ட பற்றும், ஆளுமையும் வியக்க வைக்கிறது. அனைவருக்கும் புரியும் வகையில் மட்டுமல்ல, ரசிக்கும்படியும் சொல்லும் பாங்கான பைலட் அனைவராலும் ரசிக்கப்படுகிறார். அனைவரும் ரசிக்கும் பைலட் வீடியோ இது... 

தட்பவெட்பம் பற்றி நகைச்சுவையாக சொல்லும் அவர், அழகாக விஷயத்தை சொல்வது அனைவரையும் ஈர்க்கிறது. தகவல்கள் தர வேண்டிய வேலையை, சிந்தித்து, அழகாக முன்னெடுத்துச் செல்லும் விமானியின் பாங்கு ரசிக்க வைக்கிறது.

 பனி, மழை, மேகமூட்டம் என பல்வேறு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வேண்டிய பைலட்கள், இப்படி ஆக்கப்பூர்வமாக மற்றவர்களை ரசிக்க வைக்கும் கவித்துவத்துடன் இயங்குவது என்பது பிரபலமானது இல்லை என்பதால், அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் அடுத்த முறை பயணத்தின்போது, பைலட் இவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம்!

இது அனைவரையும் தனது சொல் வளத்தால், வார்த்தைகளின் பிடியில் ஈர்த்து மயக்கிய அழகிய பைலட்டின் பணியிடை வேலை போலும்!

மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News