தலை முடி வெட்டுவதில் தான் எத்தனை வகை... பப் கட்டிங்க், ஸ்டெப் கட்டிங், பெதர் கட்டிங்க் வரிசையில் சமீபத்தில் fire(நெறுப்பு) கட்டிங் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது போர்வாள் கட்டிங்க் ஸ்பெயின் நாட்டில் பிரபலமாகி வருகின்றது.
ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் பகுதியை சேர்ந்த Alberto Olmedo என்னும் சிகை அலங்கார கடையில், சிகை அலங்கார கலைஞர் ஒருவர் தலை முடியை வெட்டுவதற்கு போர் வாளினையும், Wolverine கையுறை ஆகியற்றை பயன்படுத்தி வருகின்றார்.
இரண்டு கைகளிலும் இரண்டு போர் வாள்களை கொண்டு சரி சமமாக முடியை வெட்டும் இவர் தற்போது உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளார். முடிவெட்டுவதில், அதிலும் பெண்களுக்கு முடி வெட்டுவதில் பல்வேறு புதிய உக்திகளையும் இவர் கையாண்டு வருகின்றார். இந்த புதிய யுக்திகளின் காரணமாக இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.
Alberto Olmedo-வின் போர்வாள் யுக்தி சிகை அலங்கார முறை, வீடியோவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மன்னர் காலத்தில் மன்னர்கள் எவ்வாறு முடி வெட்டியிருப்பர் என்ற கேள்வி பலர் மனதில் உதித்திருக்கலாம், இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது...