சவுத்தாம்ப்டனில் ஏற்பட்ட மர்மமான குண்டு வெடிப்பு வேற்று கிரகவாசிகளின் பூலோக வருகை பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மார்ச் மாதம் முதல் நாளன்று சவுத்தாம்ப்டனை உலுக்கிய மர்மமான குண்டுவெடிப்பு சப்தம் மற்றும் அதன் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வீடியோவில், வானத்தில் ஒளி மற்றும் புகை எழும்புவதை பார்க்கலாம்.
இந்த சம்பவம் பற்றி கூறும் பிரிட்டன் போக்குவரத்து போலீசார், மின்கசிவு காரணமாக குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்றும், ஒரு சில இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தின் மீது ஸ்கூட்டரை தூக்கி எறிந்தனர் என்றும் தெரிவித்தனர்..
மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா
"செயின்ட் டெனிஸ் ரயில் நிலைய சம்பவம்ம்... ஏன் இப்படி நடந்தது என்று தெரியவில்லை, வேற்றுகிரகவாசிகள் திரும்பி வந்துவிட்டார்கள் என்று நினைத்தேன்..." என்று எழுதி, அந்த வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
St Denys train station... No idea why, honestly thought the aliens had returned for Fallon Carrington... #southampton #stdenys pic.twitter.com/bVGyZw7Oh1
— Anthony Weldon (@Antlv426) February 28, 2022
வெடிப்பு சப்தமும், வானத்தின் நீல நிறம் ஆரஞ்சு நிறமாக மாறுவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றான. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஒரு நேரில் கண்ட சாட்சி இந்த சம்பவத்தை வேற்றுகிரகவாசிகள் திரும்புதல் என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!
"ஏலியன்கள் திரும்பி வந்துவிட்டனர்" என்று தோன்றியதாக ஒருவர் ட்விட்டரில் எழுதினார். "எனது ஜன்னல் முழுவதும் வெண்மையாக மாறியபோது என் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டதாக உணர்ந்தேன்! அதற்கு என்ன காரணம் என்று ஆச்சரியமாக இருக்கிறது" என்று மற்றொரு நபர் எழுதினார்.
இதைப் பற்றி ஊடகங்களிடம் பேசிய மாணவர் ஒருவர், "அது பிரகாசமான வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது, மேலும் ஒரு புகை மூட்டம் - அது மிகவும் பிரகாசமாக இருந்ததை விவரிப்பது கடினம். பல்வேறு வண்ணங்களை பார்க்க முடிந்தது. அப்போது பகல்நேரம் போல் இருந்தது!" என்று தெரிவித்தார்.
இந்த வெடிப்புச் சம்பவத்தால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மேலும் படிக்க | விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன
மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR