‘நீ படம் காட்டுனா நான் பயந்துடுவேனா’: பாம்பை பின்னிப்பெடலெடுத்த கீரி, வைரல் வீடியோ

Snake vs Mongoose: அப்பா...இப்படி ஒரு சண்டயா? இணையவாசிகளை கிடுகிடுக்க வைக்கும் பாம்பு கீரி சண்டையை இங்கே காணாலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2022, 04:33 PM IST
  • பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே.
  • பாம்பு கீரி சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை நாம் தினமும் சமூக ஊடகங்களில் காண்கிறோம்.
  • எந்த வகையான பாம்பைப் பார்த்தாலும், கீரிப்பிள்ளையால் தன்னை அடக்கிக்கொள்ள முடியாது.
‘நீ படம் காட்டுனா நான் பயந்துடுவேனா’: பாம்பை பின்னிப்பெடலெடுத்த கீரி, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. பாம்பு கீரி சண்டைபோட்டுக்கொள்ளும் பல வீடியோக்களை நாம் தினமும் சமூக ஊடகங்களில் காண்கிறோம். எந்த வகையான பாம்பைப் பார்த்தாலும், கீரிப்பிள்ளையால் தன்னை அடக்கிக்கொள்ள முடியாது. உடனே அது பாம்பை வம்பிழக்க வந்துவிடும். பாம்பிடம் அதிகம் அச்சப்படாத மிக சில உயிரினங்களில் கீரிப்பிள்ளையும் ஒன்றாகும். பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடக்கும் சண்டை பொதுவாக மிக பயங்கரமாக இருக்கும் என்றாலும், பெரும்பாலும் இவற்றில் கீரிப்பிள்ளையே வெற்றி பெரும். இதை பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம். 

கீரிப்பிள்ளை அதிக அளவு சுறுசுறுப்பைக் கொண்டிருக்கும் ஒரு உயிரினமாகும். அது தனது சுறுசுறுப்பாலும், புத்திசாலித்தனத்தாலும், பாம்பின் கொடுமையான அதிரடியான தாக்குதலிலிருந்தும் தப்பித்து விடுகிறது. பிறகு நேரம் கிடைக்கும்போது, கீரி, பாம்பை சரியான இடத்தில், அதாவது அதன் வாயில் கடித்துவிடுகிறது. இதே போல் ஒரு காட்சியைக் கொண்ட ஒரு விடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதில் கருப்பு நாகப்பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் இடையில் நடக்கும் கடுமையான சண்டையை காண முடிகின்றது. 

மேலும் படிக்க | மெதுவாக ஊர்ந்து போகும் 18 அடி மலைப்பாம்பு: நடுங்க வைக்கும் வைரல் வீடியோ 

பாம்புடன் சண்டையிடும் கீரிப்பிள்ளை

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், கருப்பு நாகப்பாம்பும் கீரிப்பிள்ளையும் எதிர் எதிர் வருவதை காண முடிகின்றது. பாம்பை பார்த்த உடனேயே கீரிப்பிள்ளை சுறுசுறுப்பாகி விடுகிறது. பாம்பும் சண்டைக்கு தயாராகிறது. பாம்புக்கும் கீரிப்பிள்ளைக்கும் இடையில் திகிலூட்டும் வகையில் உள்ளது. பாம்பின் வாயை குறி பார்த்து கடிக்க கீரி முயல்கிறது. பாம்பும் அதற்கு பதிலடி கொடுக்க பல முயற்சிகளை செய்தாலும் அதனால் கீரியை வீழ்த்த முடியவில்லை. 

பாம்பு கீரியின் திகிலூட்டும் சண்டைய இங்கே காணலாம்:

வீடியோவைப் பார்த்தால், இறுதியில் கீரிப்பிள்ளைக்குத் தான் வெற்றி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்த வீடியோ Holistic Channel100 யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் சண்டை: அங்க ஒரு ட்விஸ்ட், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News