Snake Viral Video: மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் விலங்கினம் எது என கேட்டால் அனைவரும் ஒரே குரலில் சொல்வது பாம்பு என்றுதான் இருக்கும். பாம்பு காட்டுப் பகுதியில், புதர்கள் அடர்ந்த பகுதியில் அதிகம் காணப்படும் என்றாலும் தட்பவெப்ப சூழல் உள்பட பல்வேறு காரணங்களால் அவை மக்கள் அதிகம் புழங்கும் குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கடி காணப்படுவதும் உண்டு. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பதை போல் மக்கள் பாம்பை பார்த்த உடன் பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் அதை தாக்குவதும், அலறி அடித்து ஓடுவதும் நடக்கும்.
அப்படியிருக்க சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் நீண்ட பாம்பு ஊர்ந்து செல்லுவதை காணமுடிகிறது. ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் இந்த நீண்ட பாம்பை பார்த்து அதிர்ச்சியடந்து கூச்சலிடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரயில் ஏற வந்த பாம்பு
பிளாட்பாரத்தில் ஊர்ந்து செல்லும் அந்த பாம்பை பலரும் வீடியோ எடுக்க, சிலரோ தங்களின் உடைமைகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர். சிலர் அருகில் இருப்பவர்களுக்கு பாம்பு இருப்பது குறித்த தகவல் அளிக்கின்றனர். பாம்பை பார்த்த உடனே அந்த இடத்தில் பதற்றம் படிப்படியாக அதிகரிப்பதை வீடியோவை பார்த்தாலே தெரியும். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @stirpathi111 என்ற X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 40 நொடிகள் வரும் இந்த வீடியோ அதிகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை முதன்முதலில் யார் பதிவிட்டார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை.
மேலும் படிக்க | விபத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்! பாலத்தின் இடையில் சிக்கிய வைரல் வீடியோ!
தற்போது பரவி வரும் இந்த வீடியோவில் காணப்படும் பாம்பு மலைப்பாம்பு என கூறப்படுகிறது. இருப்பினும் அதுவும் உறுதியாகத் தெரியவில்லை. ரயிலுக்காக காத்திருந்த பயணிகளை ஒரு நிமிஷத்தில் பதறவைத்ததால் இந்த பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. ரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் பயணிகள் இந்த பாம்பை பார்த்த உடன் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே, ரயில் நிலையத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. உடனே, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பாம்பை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனர்.
பாம்பை பார்த்தல் உடன்...
பாம்பை நீங்கள் பொதுவெளியிலோ அல்லது மக்கள் புழங்கும் பகுதியிலோ பார்த்தீர்கள் என்றால் பதறாமல் பாதுகாப்பான இடத்திற்கு சென்று, அந்த பாம்பின் மேல் ஒரு கண்ணை வைத்துகொண்டே வனத்துறைக்கோ அல்லது தீயணைப்பு துறையில் இருக்கும் பாம்பு பிடி பிரிவினரையோ தொடர்புகொண்டு தகவல் அளிக்க வேண்டும். முடிந்தால் அருகில் இருப்பவர்களை எச்சரிக்கை செய்துவிட்டு பாம்பிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். பாம்பை அவர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளுக்கு கொண்டுச் சென்றுவிடுவார்கள். எனவே, பாம்பை பார்த்தால் தாக்கக் கூடாது, அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ