வைரல் வீடியோ: தீபங்களின் திருவிழாவான தீபாவளியை இந்தியாவில் ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. தீபாவளி என்பது ஒரு நாள் விழாவல்ல, பல நாட்கள் கொண்டாடப்படும் விழா. தீபாவளி கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக கோவர்த்தன பூஜை செய்யப்படுகிறது. கோவர்தன் பூஜை தீபாவளிக்குப் பிறகு ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது மற்றும் இது கிருஷ்ணருக்கான பூஜையாகும். இந்த நாளன்று கிருஷ்ணரைப் போற்றும் வகையில் பல்வேறு விதமான உணவுகள் மற்றும் பானங்களை படையலிட்டு வணங்குவது வழக்கம்.
ஆனால், மத்தியப் பிரதேசத்தின் பிடாவாட் கிராமத்தில், இந்த புனிதமான பூஜை வித்தியாசமான பாரம்பரியத்துடன் கொண்டாடப்படுகிறது. நீண்டகாலமாக அனுசரிக்கப்படும் உள்ளூர் வழக்கத்தின்படி, பக்தர்கள் தரையில் படுத்துக் கொள்வார்கள். ஓடிவரும் மாடுகள் அவர்களை மிதித்துச் செல்லும். இந்த பாரம்பரியத்தில் கலந்து கொண்டால், மனதில் எண்ணிய எண்ணங்களும், விருப்பங்கள் நிறைவேறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
இந்த வீடியோவை பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் மக்களின் நம்பிக்கை என்பது அனைத்தையும் தாண்டியது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
Devotees let cows trample them as a part of a tradition in Madhya Pradesh
The ritual performed on next day of Diwali. Devotees believe that by doing this their wishes will come true.
U will find SC, ST, OBC doing this, Brahmins only Preach but not Perform#HappyDiwali… pic.twitter.com/BlpnoMmzSO
— Dr Jain (@DrJain21) November 13, 2023
மேலும் படிக்க | இணையத்தை தெறிக்கவிட்ட மாப்பிள்ளை எண்ட்ரி: வேற லெவல் வைரல் வீடியோ
பிடவாட் கிராமம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தாலுகாவில் அமைந்துள்ளது. கோவர்தன் பூஜை இந்துக்களிடையே ஒரு பெரிய மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அன்னகூட் அல்லது அன்னகூட் என்றும் அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறையில் பிரதிபத திதியில் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, கோவர்தன் விழா இன்று நவம்பர் 14, 2023 அன்று கொண்டாடப்பட்டது.
அதன்பிறகு, வெளியிடப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிறது. கோவர்தன பூஜையில் மாட்டிடம் மிதி வாங்கும் பக்தர்களின் வீடியோ வைரகும் நிலையில், இது தொடர்பான பல்வேரு கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
கோவர்தன பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது?
பிருந்தாவனத்தில் வசிப்பவர்களை இந்திரனின் கோபத்திலிருந்து காக்க ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதன் நினைவாக கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது.
கோவர்தன மலையை தூக்கிய கிருஷ்ணருக்கு பிடித்தமான, பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்புகளையும், தின்பண்டங்களையும் தயாரித்து சிறு குன்று போல உணவுகளை அடுக்கி படைக்கிறார்கள். பின்னர் அனைவருக்கும் இந்த பலகாரங்கள் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. எனவே இவ்விழா அன்னகூட விழா என்றும் அழைக்கப்படுகிறது.
ஆனால், மாடு மேய்த்த கிருஷ்ணனுக்கு நன்றி செலுத்தும்போது, மாடுகளிடம் மிதி வாங்கும் பாரம்பரியம் கொஞ்சம் ஓவர் என்று நெட்டிசன்கள் கருத்து சொல்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | நாகப்பாம்பை வெச்சு செய்யும் குரங்கு: பீதியுடன் பார்க்கும் நெட்டிசன்ஸ்.. வைரல் விடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ