18 அடி பாம்பா இருந்தாலும், முதலையை அப்படியே முழுங்கினா செரிமானம் ஆகாது! வைரல் வீடியோ

Python vs Alligator Video Viral: ஆசைப்பட்டு இரையை விழுங்கிவிட்டு அதை செரிக்க இயலாமல் கஷ்டப்படும் பாம்பின் பயங்கர வீடியோ வைரலாகிறது. பார்த்தாலே பயம் தரும் பாம்பு ஆபரேஷன்.. டெலிவரியானது முழு முதலை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 4, 2023, 03:26 PM IST
  • முதலையை முழுங்கிய மலைப்பாம்பு!
  • பாம்புக்கு ஆபரேஷன் சக்சஸ்
  • பாம்புக்கு ஆபரேஷன் ஆனால் வெளிவந்தது முதலை
18 அடி பாம்பா இருந்தாலும், முதலையை அப்படியே முழுங்கினா செரிமானம் ஆகாது! வைரல் வீடியோ title=

முதலையை முழுங்கிய மலைப்பாம்பு: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் மூலம் நாம் அறியாத விலங்குகளின் வாழ்க்கையை பார்த்து ரசிக்கலாம்.பாம்புகள், வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பலராலும் பார்க்கப்படுகின்றன. வீடியோக்களில் சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டினால், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். 

பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பயப்படும் மனிதர்கள் உள்ளார்கள். நஞ்சு கொண்ட பாம்பு தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் எண்ணிலடங்காத அளவு பகிரப்பட்டாலும், அதை மொபைலில் பார்த்து ரசித்தாலும், பாம்பு நேரில் வந்தால் என்ன ஆகும்?

பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான விஷத்தையும் கொண்ட  நாகங்கள் தொடர்பான எந்த ஒரு விஷயமும் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், முதலை ஒன்றை அப்படியே விழுங்கிய பாம்பு ஒன்று, அதை செரிக்க இயலாமல் திணறியது. அதன் பிறகு, பாம்புக்கு ஆபரேசன் செய்து முதலையை வெளியே எடுத்துள்ளனர். இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்கின்றனர். பார்த்தாலே, பயப்பட வைக்கும் வீடியோவை பாருங்கள்

வைரலாகும் நாகத்தின் வீடியோ  

மேலும் படிக்க | நம்புங்க! இது அரச குடும்பத்தினரின் திருமணம் இல்லை... திருமண வீடியோ வைரல்

அக்டோபர் மாதம் வெளியான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பார்த்து பயப்பட வைக்கும் வீடியோவாக இருந்தாலும், பாம்பின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அனைவரும் நன்றி சொல்கின்றனர்.  சமூக ஊடகப் பயனர்கள் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ குறித்து கருத்துப் பிரிவில் அதிர்ச்சியும் கவலையும் கலந்த கருத்துக்களையும் எண்ணங்களையும் எழுதி உள்ளனர்:

மிகவும் ஆபத்தான ஆபரேஷன் என்று ஒருவர் சொன்னால், பாம்பு மயக்கத்தில் இருந்தாலும் கூடுதல் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். அது தான் உயிரை காப்பாற்றிக் கொள்ள உதவும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகம். இணையத்தில் எண்ணிடங்காத வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அவற்றின் மூலம் நாம் அறியாத விலங்குகளின் வாழ்க்கையை பார்த்து ரசிக்கலாம்.

பாம்புகள், வன விலங்குகள், பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு பலராலும் பார்க்கப்படுகின்றன. வீடியோக்களில் சில பார்ப்பவர்களுக்கு பீதியை ஊட்டினால், சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News