அதர்வாவின் 'செம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் வெளியானது!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்து வரும் படம் `செம போத ஆகாதே'. இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

Last Updated : May 12, 2018, 08:20 AM IST
அதர்வாவின் 'செம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் வெளியானது! title=

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்து வரும் படம் `செம போத ஆகாதே'. இப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வரும் மே 18 -ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தினை அதர்வா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

மனோபாலா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது நடிகர் அதர்வா `இமைக்கா நொடிகள்', `பூமராங்', `ஒத்தைக்கு ஒத்த' படங்களில் பிஸியாக உள்ளார் குறிப்பிடத்தக்கது. 

Trending News