SeePics: அர்ஜுன் ரெட்டி வேடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள்!

அர்ஜுன் ரெட்டி திரைப்பட நாயகன் விஜய் தேவகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Dec 23, 2017, 07:06 AM IST
SeePics: அர்ஜுன் ரெட்டி வேடத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள்! title=

டோலிவுட் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி கண்ட திரைப்படம் "அர்ஜுன் ரெட்டி".

இப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது இப்படத்தின் தமிழ் ரீ-மேக்கினை, இயக்குனர் பாலா இயக்க நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். 

தமிழை தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி படம் ஹிந்தியிலும் ரீ-மேக்காக உள்ளது. இயக்குநர் சந்தீப் வங்கா இதற்கான ரீ-மேக் உரிமத்தைப் பெற்றுள்ளார். 

நாடுமுழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தினை குறித்து ஆரோக்கியமான கருத்துகள் பரவி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திரத்தினை தமிழ் திரையுலக நடிகர்கள் ஏற்றிருந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தப் புகைப்படத்தினை, அர்ஜுன் ரெட்டி திரைப்பட நாயகன் விஜய் தேவகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

Trending News