சமந்தா வெளிட்ட புதிய புகைப்படம்! ரசிகர்கள் குஷி!

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 

Last Updated : May 3, 2018, 03:24 PM IST
சமந்தா வெளிட்ட புதிய புகைப்படம்! ரசிகர்கள் குஷி! title=

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். 

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார். அதே வேகத்தில் இவர் திருமணமும் செய்துகொண்டார். திருமணம் செய்த உடனடியாக ஹீரோயினாகவே சினிமாவுக்கும் திரும்பிவிட்டார் நடிகை சமந்தா.

விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என்று தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் ஒன்றாக நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். பின்னர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்கள் இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். 

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தன் கணவர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக இருக்கிறார். சமந்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

 

 

You are my happy place 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

Trending News