வெள்ளை நிற ராஜா நாகப்பாம்பின் வீடியோ வைரல்: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதன்படி விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகளின் வீடியோ தனி மவுசு உள்ளது. தற்போது இங்கு ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதன்படி சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான ஸ்வேதா நாகு என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. அப்போது இந்தப் படம் தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமின்றி இப்படம் நல்ல வசூலையும் ஈட்டியது. இப்போது ஸ்வேதா நகரின் ஒரு அரிய வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பாம்பு உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்றாகும். அது கொட்டினால் காப்பாற்றுவது மிகவும் கடினமாகும். அதன் உடல் கருப்பு மற்றும் அதன் மீது ஒரு வெள்ளை பட்டை உள்ளது. ஆனால் வெள்ளை நிற நாகப்பாம்பை பார்த்திருக்கிறீர்களா? வாருங்கள் அந்த நாகப்பாம்பை பற்றி இப்போது இந்த வீடியோ பதிவில் காணபோம்.
இந்நிலையில், இந்த அரிய வகை வெள்ளை நிற பாம்பு கோவை குறிச்சி சக்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் தென்பட்டது. பிறகு அந்த குடும்பத்தினர் வெள்ளை நிற பாம்பு தங்களின் வீட்டில் இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வன ஆர்வலர்கள் அந்த வெள்ளை நிற நாகத்தை காயமின்றி பிடித்தனர். அதன் பின்னர் அந்த பாம்பை கோவை வனத்துறை அதிகாரகளிடம் ஒப்படைத்தனர்.
அரிய வகை வெள்ளை பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:
#TamilNadu के कोयंबटूर में अद्भुत दुर्लभ सफेद कोबरा नाग #whitecobra पकड़ा गया है..
यह कोबरा कोयंबटूर के Kurichi में एक घर के आंगन में वाइल्डलाइफ एंड नेचर कंजर्वेशन ट्रस्ट के वॉलंटियर ने रेस्क्यू किया था..
गुरुवार को इसे #Anaikatti के करीब जंगल में छोड़ दिया गया...#viralvideo pic.twitter.com/nWDTi3OhDu
— Kuldeep Panwar (@Sports_Kuldeep) May 4, 2023
வனத் துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பாம்புகள் பிரச்சனைகளால் வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைதளங்களில் மக்கள் ஆச்சரியமடைந்தனர்
சுமார் 8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இரண்டு யானைகளுக்கு இடையே இவ்வளவு அபாயகரமான சண்டையைக் கண்டு பல பயனர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | பாம்பு கொட்டாவி விடுவதை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்கள்....மிக அரிய வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ